பக்கவாதம்

இரத்த உறைவால் மூளைக்குச் செல்லும் இரத்தம் தடைபடும்போது பக்கவாதம் ஏற்படுகிறது. மூளையைச் சுற்றி இருக்கும் ஒரு இரத்தக் குழாய் வெடிப்பதனாலும் இது உண்டாகும். இதனால் மூளைச் சிதைவு அல்லது மரணம் நேரிடும்.

பக்கவாதத்தின் வகைகள்:

குருதியூட்டக்குறை பக்கவாதம்: 85 % பக்கவாதம் குருதியூட்டக்குறையால் உண்டாவதே. இதில் இரத்தக் குழாய்களின் உட்புறப் பரப்பில் கொழுப்பு படிவதாலும், இரத்த உறைவாலும் மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் தடைபடுகிறது.

இரத்தக்குழாய் சிதைவு பக்கவாதம்: மூளையில் உள்ள இரத்தக் குழாய் வெடிப்பதால் இது ஏற்படுகிறது. இரத்தம் தேங்கி, சூழ்ந்துள்ள இரத்தத் திசுக்களை அழுத்துகிறது.

உட்பெருமூளை குருதிக்கசிவுப் பக்கவாதம்: இரத்தக் குழாய் சிதைவு பக்கவாதத்தில் இதுவே பரவலான வகை. மூளையில் உள்ள ஒரு தமனி வெடித்து அருகில் உள்ள திசுக்களில் பாயும் போது இது ஏற்படுகிறது.

மூளைநடுச்சவ்வடி குருதிக்கசிவுப் பக்கவாதம்: மூளைக்கும் அதை மூடி இருக்கும் மெல்லிய திசுக்களுக்கும் இடையில் குருதிக்கசிவு ஏற்படுவதால் உண்டாகும் பக்கவாதம்.

இடைநிலை குருதியூட்டக்குறை தாக்குதல் என்பது ஒரு எச்சரிக்கை அல்லது சிறு பக்கவாதம் ஆகும். இதனால் நீடித்த சேதம் ஏற்படுவதில்லை. இதனைக் கண்டறிந்து உடனடியாக மருத்துவம் அளித்தால் பெரும் மாரடைப்பைத் தவிர்க்கலாம்.

குறிப்புகள் : www.cdc.gov 
www.nhs.uk 
www.nlm.nih.gov 
www.nhlbi.nih.gov 
http://www.stroke.org

பேச்சு, நடத்தை, சிந்தனை, ஞாபகம், உணர்ச்சிகள் ஆகிய எந்த ஒரு புலனையும் பக்கவாதம் பாதிக்கக் கூடும். உடல் பலவீனமாகி முடங்கிவிடும்.

பக்கவாதத்தின் ஐந்து முக்கிய அறிகுறிகளாவன:

 • முகம், கரம், கால்களில் உணர்ச்சியின்மை அல்லது பலவீனம்
 • பேசுவதிலும் புரிந்து கொள்வதிலும் குழப்பம்
 • பார்வையில் சிக்கல்
 • தலைக்கிறக்கம், நடப்பதில் சிரமம், சமநிலை இழப்பு, ஒருங்கிணப்பு இழத்தல்
 • காரணம் தெரியாத கடுமையான தலைவலி

குறிப்பு : www.cdc.gov

பக்கவாதம் கீழ்வரும் அபாயங்களுடன் தொடர்புடையது:

 • குடும்ப வரலாறு
 • மூப்பு
 • அதிக இரத்த அழுத்தம்
 • அதிகக் கொழுப்பு
 • பொதுவான இதயக் கோளாறுகள்
 • புகைத்தல் (இரத்தக் குழாய்களுக்குக் காயம் ஏற்படுத்தி தமனிகள் கட்டிப்படுவதை வேகப்படுத்துகிறது)
 • அதிக மது அருந்துதல் (இரத்த அழுத்தத்தை அதிகரித்தல்)

குறிப்பு : www.cdc.gov

பொதுவாகப் பக்கவாதம் மூளை பிம்பங்களினாலும் உடல் பரிசோதனைகளாலும் கண்டறியப்படுகிறது.

கணினி வரைவிப்படமும் காந்த அதிர்வு பிம்பமும்:

மூளையின் பிம்பங்களை உருவாக்க இரு பொதுவான முறைகள் கணினி வரைவிப்படமும் காந்த அதிர்வு பிம்பமும் ஆகும்.
கணினி வரைவிப்படம் எக்ஸ்-கதிர் போன்றதே. ஆனால் பல்பிம்பங்களைப் பயன்படுத்தி மேலும் விவரங்கள் அடங்கிய முப்படிகப் படத்தை உருவாக்குகிறது.
காந்த அதிர்வு பிம்ப முறையில் வலிமையான காந்தக்களத்தையும் வானொலி அலைகளையும் பயன்படுத்தி உடலின் விவரங்கள் கொண்ட படம் உருவாக்கப்படுகிறது.

விழுங்கும் சோதனை:

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு விழுங்கும் சோதனை முக்கியமானது.  ஒருவரால் சரியாக விழுங்க முடியாவிட்டால் உணவுப்பொருட்களும் நீரும் காற்றுக்குழலிலும் பின் நுரையீரலுக்குள்ளும் சென்றுவிடும் அபாயம் ஏற்படும். இதனால் நெஞ்சுத் தொற்று நோயும் நிமோனியாவும்  ஏற்படலாம்.

பக்கவாதத்தைக் கண்டறிய பொதுவாக நடத்தப்படும் சில சோதனைகள் வருமாறு:

கேளா ஒலி (தலைத்தமனி மீயொலி அளவியல்)

ஒரு கேளா ஒலி வரைவி, அதி அதிர்வெண் ஒலி அலைகளைப் பயன்படுத்தி உடலின் பிம்பத்தை உருவாக்குகிறது. கோல் போன்ற ஓர் ஆய்வுக் கருவியை (ஆற்றல்மாற்றி) பயன்படுத்தி மருத்துவர் அதி-அதிர்வெண் ஒலி அலைகளைக் கழுத்துக்குள் செலுத்துகிறார். இது திசுக்களின் ஊடாகச் சென்று ஒரு திரையில் பிம்பங்களை உண்டாக்குகிறது. இதனால் மூளைக்குச் செல்லும் தமனிகளில் இடுக்கமோ அல்லது உறைவோ ஏற்பட்டுள்ளதா என்று அறிய முடியும்.

இத்தகைய கேளா ஒலி வரைவி சில வேளை “டாப்லர் வரைவி” அல்லது “டூப்லெக்ஸ் வரைவி” என்றும் அழைக்கப்படும். தேவைப்பட்டால் 48 மணி நேரத்துக்குள் தலைத்தமனி மீவொலி அளவியல் செய்யப்பட வேண்டும்.

கேளா ஒலி (தலைத்தமனி மீயொலி அளவியல்)

ஒரு கேளா ஒலி வரைவி, அதி அதிர்வெண் ஒலி அலைகளைப் பயன்படுத்தி உடலின் பிம்பத்தை உருவாக்குகிறது. கோல் போன்ற ஓர் ஆய்வுக் கருவியை (ஆற்றல்மாற்றி) பயன்படுத்தி மருத்துவர் அதி-அதிர்வெண் ஒலி அலைகளைக் கழுத்துக்குள் செலுத்துகிறார். இது திசுக்களின் ஊடாகச் சென்று ஒரு திரையில் பிம்பங்களை உண்டாக்குகிறது. இதனால் மூளைக்குச் செல்லும் தமனிகளில் இடுக்கமோ அல்லது உறைவோ ஏற்பட்டுள்ளதா என்று அறிய முடியும்.
இத்தகைய கேளா ஒலி வரைவி சில வேளை “டாப்லர் வரைவி” அல்லது “டூப்லெக்ஸ் வரைவி” என்றும் அழைக்கப்படும். தேவைப்பட்டால் 48 மணி நேரத்துக்குள் தலைத்தமனி மீவொலி அளவியல் செய்யப்பட வேண்டும்.

வடிகுழாய் இரத்தக் குழாய் வரைவி (தமனிவரைவி)

ஒரு வடிகுழாயின் உதவியால் சாயம் தலைத்தமனிக்குள் செலுத்தப்படுகிறது. இது கேளா ஒலி, கணினி வரைவி அல்லது காந்த அதிர்வு இரத்தக் குழாய் வரைவிகளை விட தமனிகளின் விவரமான படங்களை அளிக்கிறது.

எதிரொலி இதயவரைவு

நெஞ்சில் வைக்கப்படும் ஒரு கேளா ஒலி ஆய்வமைப்பைப் பயன்படுத்தி எதிரொலி இதயவரைவு மூலம் இதயத்தின் பிம்பம் உருவாக்கப்படுகிறது.  மாறுபக்க உணவுக்குழாய் எதிரொலி இதய வரைவும் கூடுதலாகப் பயன்படுத்தப்படலாம். பொதுவாக மயக்க மருந்து அளித்து உணவுக் குழாயின் அடிப்பகுதி வரை கேளா ஒலி ஆய்வு செய்வது இதில் அடக்கம். ஏனெனில் அது இதயத்துக்கு நேரடியாகப் பின்புறம் இருப்பதால் மாறுபக்க உள்மார்பக எதிரொலி இதய வரைவிக்கு அகப்படாத இரத்த உறைவையும் வேறு கோளாறுகளையும் காட்டும் தெளிவான பிம்பத்தை உருவாக்குகிறது.

குறிப்பு: www.nhs.uk

மூளைத் தமனியில் இருக்கும் இரத்த உறைவை உடைக்கக் கூடிய திசு பிளாஸ்மினோஜன் செயலூக்கிகள் மூலம் பக்க வாதத்துக்கு சிகிச்சை அளிக்கலாம். மருத்துவர் இதனைக் கை நரம்பு மூலம் உட்செலுத்துகிறார். அறிகுறிகள் தென்பட்டு 4 மணி நேரத்துக்குள் இம்மருந்து கொடுக்கப்பட வேண்டும்.

இரத்தக்குழாய் சிதைவு பக்கவாதம்

இரத்தக் கசிவைக் கட்டுப்படுத்துதல், மூளையில் அழுத்தத்தைக் குறைத்தல், முக்கிய குறிகளை, குறிப்பாக இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் கொண்டுவருதல் ஆகியவை இரத்தக்குழாய் சிதைவு பக்கவாத சிகிச்சையில் அடங்கும்.

 • அமைதியிழத்தல், மனக்குழப்பம், கூறும் விதத்தில் செய்யமுடியாமை, தலைவலி போன்று நோயாளிக்கு மூளையில் அழுத்தம் அதிகரிக்கும் அறிகுறிகளைக் கவனமாகக் கண்காணிக்க வேண்டும். அதிகமாக இருமுதல், வாந்தி, மலம்கழித்தல் ஆகியவற்றின் போதும், நோயாளியைத் தூக்கி இடமாற்றும் போதும் நோயாளியின் உடல் உலையாமல் பாதுகாக்க வேண்டும்.
 • இரத்த அழுத்தம், மூளை வீக்கம், இரத்த சர்க்கரை அளவு, காய்ச்சல், வலிப்பு போன்றவைகளுக்காக சில நோயாளிகளுக்கு மருந்து கொடுக்க வேண்டியது இருக்கும்.
 • குருதி நெளிவு நேராக்கல், சுருள் அகற்றல், தமனிசிரை ஒழுங்கின்மை சரிசெய்தல் ஆகியவற்றிற்காகத் தேவைப்பட்டால் அறுவை மருத்துவம் அளிக்கப்படும்.

குறிப்பு : www.nhlbi.nih.gov

பக்கவாதத்தால் எழும் சிக்கல்கள் யாவுமே உயிருக்கு ஆபத்தானவையே. அவற்றில் சில வருமாறு:

விழுங்கமுடியாமை:

பக்கவாதத்தால் ஏற்படும் சேதத்தால் இயல்பாக விழுங்கும் செயல் தடைபடும். இதனால் சிறு உணவு துணுக்குகள் சுவாசப் பாதையில் நுழைந்து நுரையீரல் சேதமும் அதனால் தொற்றுநோயும் உண்டாகும் (நிமோனியா).

கபால நீர்கோர்ப்பு:

மூளை அறைகளில் அதிகமான மூளை-தண்டுவடநீர் தேங்குவதே கபாலநீர்க்கோர்ப்பு. இரத்தக் குழாய் சிதைவு பக்கவாதம் ஏற்படுவோரில் 10% நோயாளிகளுக்கு கபால நீர்க்கோர்ப்பு உண்டாகும்.

ஆழ்நரம்பு குருதியுறைவு:

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட சிலருக்கு காலிலும் இரத்த உறைவு ஏற்படும். இதுவே ஆழ்நரம்பு குருதியுறைவு எனப்படும். நகரமுடியாமையால் நரம்புகளில் குருதியோட்டம் குறைந்து இரத்த அழுத்தம் அதிகரித்து குருதி உறையும் வாய்ப்பும் உண்டாகும்.

குறிப்பு : www.nhs.uk

 • PUBLISHED DATE : May 19, 2015
 • PUBLISHED BY : NHP CC DC
 • CREATED / VALIDATED BY : NHP Admin
 • LAST UPDATED ON : Jun 04, 2015

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.