பின்னக்கி நரம்புவலி

கடும் பரக்கித் தொற்றுக்குப் பின் மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட மாதங்களுக்கு நீடித்த நரம்பு வலி தொடர்வதே பின்னக்கி நரம்புவலி (PHN) என வரையறுக்கப்படுகிறது. இது கடும் வலி கொண்ட இரண்டாம் கட்டம். முதல் கட்டப் பரக்கித் [அக்கி அம்மை அல்லது நரம்புத் தொடர்தோல் எழுச்சி என்ற குளிர்நடுக்கம் (ஹெர்ப்பஸ் ஜோஸ்டர்}] தொற்றுக்கு மூன்றில் இருந்து ஆறு வாரங்களுக்குப் பின் இது உருவாகலாம். வலி ஒருநரம்புத்தோல் பகுதியில் காணப்படும். கொப்புளம் காணப்படும் அதே தோல் பகுதியில் மட்டுமே வலி இருக்கும். வேரிசெல்லா ஜோஸ்டர் வைரஸ் செயலூக்கம் (VZV) பெருவதால் பரக்கித் தொற்று விளைகிறது. சின்னம்மைத் தொற்று (வேரிசெல்லா) முதன்முதலில் ஏற்பட்டபோதிருந்து முதுகுப்புற நரம்பு வேர்முடிச்சில் இவை செயலற்ற நிலையில் இருக்கும். பரக்கித் தொற்றுக்கு முன்னரே அடிக்கடி வலி ஏற்படும் (முன் அக்கி நரம்புவலி). கொப்புளம் காய்ந்து பல வாரங்களுக்கு நீடிக்கும். இது முதியோர் மத்தியில் பரவலாகக் காணப்படுகிறது (70 வயதுக்கு மேற்பட்டோரில் 75% பேருக்கு). 50 வயதுக்குக் கீழ்ப்பட்டோருக்கு மிக அரிதாகவே ஏற்படும்.

பின்னக்கி நரம்புவலி தானாகவே தீரும். ஆனால் பல ஆண்டுகள் இதனால் நோயாளிகள் துன்பம் அடைவர். உணர்வற்ற தோல் பகுதிகளை நோய்தீர்ந்த பின் விட்டுச்செல்லும்.  பெரும் இயக்கு நரம்புகளைப் பாதித்தால் தசை பலவீனத்துக்கு இட்டுச் செல்லும்.

பின்னக்கி நரம்புவலியோடு தொடர் மற்றும் அடிக்கடி ஏற்படும் கட்டுப்படா நரம்புநோய் வலியும் காணப்படும். இந்த நரம்புவலி மிகத்துன்புறுத்துவதாகவும் கிழிக்கும் அசாதாரண உணர்வு மேற்பொருந்தியதாகவும் இருக்கும். வலி தொடர்ந்து அல்லது இடைவிட்டு காணப்படும். வெப்பம் அல்லது தொடுதல் போன்ற சிறு தூண்டிகளாலும் அதிகமாகும். இரவில் மிக மோசமானதாக மாறும். வலிமையின் கொடுமையால் தூக்கமின்மை, பசியின்மை மற்றும் மனநிலை மாற்றங்கள் (மனச்சோர்வு) ஏற்படும்.

பின்னக்கி நரம்புவலி பல்வேறு வகையான வலிகளை நோயாளிகளில் உருவாக்கும். எ-டு.

 • தொடர் வேதனை, ஆழமான அல்லது எரியும் வலி
 • அடுத்தடுத்து வரும் கீறும் வலி
 • அதிக வலியை உணர்தல்
 • வலிக்காத தூண்டலோடு இணைந்த வலி

பின்னக்கி நரம்புவலி, ஒரு தனி நபரின் உளவியல், சமூக மற்றும் உடலியல் செயல்பாட்டில் தாக்கம் செலுத்தும் ஓர் உளம்சார் சமூக நிலை.

குறிப்புகள்

Hyodo M, Oyama T, Swerdlow M. The Pain Clinic IV- Proceedings of the Fourth International Symposium. VSP BV 1992. P 51- 61.

Waldman Steven D. Pain Review. Saunders, an imprint of Elsevier Inc. 2009. P 289-290.

Waldman Steven D. Atlas of Common Pain Syndromes Third Edition. Saunders, an imprint of Elsevier Inc. 2012. P 221- 223.

Waldman Steven D. Pain Management Second Edition. Saunders, an imprint of Elsevier Inc. 2011. P 268-271.

Kaufman David Myland, Milstein Mark J. Kaufman’s Clinical Neurology for Psychiatrists Seventh Edition. Saunders, an imprint of Elsevier Inc. 2013. P 320.

Stannard Cathy, Kalso Eija, Ballantyne Jane. Evidence-Based Chronic Pain Management. Blackwell Publishing Ltd 2010.

Kanski Jack J, Bowling Brad. Clinical Ophthalmology- A systematic Approach Seventh Edition. Elsevier Saunders, an imprint of Elsevier Limited 2011. 

Fields Howard L. Pain Syndromes in Neurology. Butterworth & Co. (Publishers) Ltd, 1990. P 223.

http://www.ijdvl.com/article.asp?issn=0378-6323;year=2001;volume=67;issue=1;spage=30;epage=30;aulast=Abraham

https://www.researchgate.net/publication/294730351_Post-herpetic_Neuralgia_a_Review

http://www.jaypeejournals.com/eJournals/ShowText.aspx?ID=8772&Type=FREE&TYP=TOP&IID=677&Value=40&isPDF=YES

 

பரக்கிப் பொக்களங்கள் குணமடையும் போது கரிந்து வீழும். பொக்களங்கள் இருந்த இடத்தில் இளம்சிவப்பு வடுக்கள் காணப்படும். இவை பின்னர் படிப்படியாக மிகைநிறமியேற்றும் செயல்திறன் இழந்தும் காணப்படும்.

பின்னக்கி நரம்புவலியின் அறிகுறிகள்:

 • வலி: பின்னக்கி நரம்புவலி பல்வேறு வகையான வலிகளை நோயாளிகளில் உருவாக்கும். எ-டு.
 1. தொடர் வேதனை, ஆழமான அல்லது எரியும் வலி
 2. அடுத்தடுத்து வரும் கீறும் வலி
 3. அதிக வலியை உணர்தல்
 4. வலிக்காத தூண்டலோடு இணைந்த வலி
 • வடுவுற்ற தோலில் உணர்வுக் கோளாறுகள்: இவை கீழ்க்கண்ட வடிவங்களை எடுக்கும்.
 1. குறை உணர்வு: பின்னக்கி நரம்புவலி நோயாளிகளில் வடுவுற்ற பகுதியில் உணர்வு குறைபடும். குறையுணர்வு நீடிக்கும் வரை சிகிச்சை அளிப்பது அவசியம்.
 2. வலியற்ற தூண்டலோடு இணைந்த வலி மற்றும் மிகையுணர்வு: வடுவுற்றத் தோலில் பெரும்பாலும் காணலாம்.

நீடித்தப் பின்னக்கி நரம்புவலி பொதுவாக குறை உளவுணர்வு மற்றும் சமூகத்தில் இருந்து தனிமைப்படும் போக்கு போன்ற உளவியல் சார் கூடுதல் நோய்களையும் காட்டும்.

பெரும்பாலான நோயாளிகளில், வலி மற்றும் உணர்திறன் கோளாறுகள் காலப்போக்கில் தோல் புண்கள் குணமடைவதை ஒட்டி சீராகும். ஆனால் சிலருக்கோ குணமான பின்னரும் வலி நீடிக்கலாம்.

 

பின்னக்கி நரம்புவலி உருவாகக் காரணமான ஆபத்துக் காரணிகள்:

 • முதிர் வயது
 • பரக்கி வலியின் கடுமை
 • கொப்புளத்தின் கடுமை
 • கடும் அறிகுறிகளுக்கு முன் வரும் வலிமிக நோய்முன்னறிகுறி
 • பரக்கி தாக்கத்தின் போது ஒருநரம்புத்தோல்பகுதியில் உணர்வு செயலிழப்பு
 • காய்ச்சல்
 • சமூகவுளவியல் அழுத்தம்

பின்னக்கி நரம்புவலி ஒரு வலிமிகுந்த கோளாறு. கடும் பரக்கித் தொற்றுக்குப் பின் இது உருவாகிறது.  வலி பரக்கி வருவதற்கு முன்னரே (முன்னக்கி நரம்புவலி) தோன்றும். கொப்புளம் கரிந்து சில வாரங்களுக்கு வலி நீடிக்கும்.

முதன் முறையாக தொற்று ஏற்பட்டதில் இருந்து முதுகுப்புற நரம்புவேர் முடிச்சில் செயலற்று இருந்த வேரிசெல்லா ஜோஸ்டர் வைரசின் செயலூக்கத்தால் கடும் பரக்கி தொற்று அல்லது குளிர்நடுக்கம் ஏற்படுகிறது. நரம்புமுடிச்சு நரம்புத்தண்டில் இந்த வைரசுகள் தங்களை நகலெடுத்துக்கொண்டு, அடுத்துள்ள பிற செல்களில் தொற்று ஏற்படுத்தியவாறு நரம்புத் தண்டுகள் வழியாகப் பரவி  நரம்பணுக்குச் சென்று தோலில் தொற்றை உருவாக்கிக் கொப்புளங்களை உருவாக்குகிறது. ஒரு குறிப்பிட்ட அளவுக்கு வைரசுகள் மத்தியில் பயணம் செய்து மூளையுறை மற்றும் தண்டுவடத்தில் அழற்சியை உருவாக்குகின்றன.

 

மருத்துவ சோதனை மூலமாகவே பின்னக்கி நரம்புநோய் கண்டறியப்படுகிறது.

கடும் வலியே இந்நோயின் தனித்தன்மை. இது இரண்டில் இருந்து நான்கு வாரங்கள் வரை நீடிக்கும். இதன் பின், ஏழில் இருந்து பத்து நாட்கள் கழித்துக் கொப்புளங்கள் தோன்றும். தனித்துவமான இந்தப் பொக்களம் வெண்கொப்புள எழுச்சியாக இருக்கும். பின் நுண்கொப்புளமாகவும், சீழ்க்கொப்புளமாகவும் இறுதியில் பொருக்கும் உருவாகும். பொதுவாக அறிகுறிகள் இரண்டு அல்லது நான்கு வாரங்களில் அடங்கும். பத்து சத விகித நோயாளிகளுக்கே பின்னக்கி நரம்புநோயாக மாறும். பின்னக்கி நரம்புவலிதான் பரக்கியின் நீடித்த சிக்கல். மேலும் தொற்றின் விளைவாக ஏற்படும் மிகவும் பொதுவான நரம்புநோய் வலி.

முதுகெலும்பு அழுத்தம் அல்லது நோயாளியின் நோய்த்தடுப்பு இணக்கம்செய்யப்பட்டதுக்கு அடிப்படையான நோய் போன்ற சிகிச்சை அளிக்கக் கூடிய இணை நோய்களைக் கண்டறியப் பொதுவாக சோதனை செய்யப்படுகிறது. நோய்த்தடுப்பு இணக்கம்செய்யப்பட்ட நிலை பரக்கி தொற்றுக்கு முன்சாதகமாக அமைகிறது.

வேறுபடுத்திக் கண்டறிதல்:

 • நெஞ்சுசார் பின்னக்கி நரம்புவலி இருந்தால் நெஞ்சுசார் அடிநரம்புவேர்நோய்
 • விளிம்பு நரம்புநோய்
 • நெஞ்சக அல்லது உள்வயிற்று நோய்களைப் போன்ற வலியை ஏற்படுத்தும்
 • உள்மண்டை நோயியல், கண் நோய்கள், காது நோய்களால் ஏற்படும் வலியும் இதுபோல் இருக்கலாம்.

 

 

பின்னக்கி நரம்புவலி ஒரு மிகவும் சிக்கலான மருந்தெதிர்ப்பு நரம்புநோய் வலி. நடு மற்றும் விளிம்பு நரம்பு மண்டலப் பரவலுணர்வு செயலாக்கத்தில் ஏற்படும் மாற்றங்களால் இது விளைகிறது.

கடும் நரம்புவலியையும் பின்னக்கி நரம்புவலியையும் குறைக்கக் கொப்புளம் ஏற்பட்டு முதல் 72 மணி நேரத்துக்குள் பின்னக்கி நரம்புவலி நோயாளிக்கு சிகிச்சை அளிப்பதே மேலாண்மையின் நோக்கம்.

சிகிச்சை அளிப்பதற்குக் மிகக்கடினமான வலி நோய்த்தாக்கங்களில் ஒன்று பின்னக்கி நரம்புவலி. ஒரு சிலருக்கு ஏன் இந்நோய் ஏற்படுகிறது ஒரு சிலருக்கு ஏன் ஏற்படுவதில்லை என்பதை இன்னும் கண்டறிய முடியவில்லை. இக்கோளாறு முதியோருக்கு அடிக்கடி ஏற்படுகிறது. நெஞ்சுப் பகுதியைப் பாதிக்கும் கடும் பரக்கியோடு ஒப்பிடும்போது முக்கிளை மண்ட நரம்பைப் பாதிக்கும் பரக்கியை தொடர்ந்து இது ஏற்படுகிறது. கடும் பரக்கித் தொற்றுக்கு தீவிரமாக சிகிச்சை அளித்தால் பின்னக்கி நரம்புவலியைத் தவிர்க்க அது உதவும்.

தடுப்பூசி:

ஒரு வீரியம் குறைந்த உயிர் தடுப்பூசி பரக்கி வைரசுக்கு எதிராக நோய்த்தடுப்பாற்றலை அளிக்கிறது.  60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இது பரிந்துரைக்கப்படுகிறது. பின்னக்கி நோய்வலியையும் வைரசு தொற்றையும் இது குறிப்பிடத்தக்க அளவில் தடுக்கிறது.

மருத்துவ சிகிச்சை:

 

 • எதிர்வைரல் மருந்துகள்: அசிக்ளோவர், வால்ஸி கிளோவிர், மற்றும் ஃபாம்சிக்ளோவிர் போன்ற எதிர்வைரல் மருந்துகள் கடும் நரம்பு வலியையும் பின்னக்கி நரம்புவலியையும் குறைக்கும். இந்த மருந்துகள் வைரல் உதிர்வைக் குறைக்கவும் அறிகுறிகளைத் தீர்க்கவும் உதவுகின்றன.
 • வலிப்படக்கி காபாபெண்டின்: பின்னக்கி நரம்புவலி மேலாண்மைக்கு காபாபெண்டின் மிகச்சிறந்தது ஆகும். ஆனால் காபாபெண்டின் செயல்நுட்பம் அறியப்படவில்லை.
 • வலிப்படக்கி பிரகாப்லின்: கிளர்ச்சி நரம்பியக்கடத்திகள் வெளியிடப்படுவதை பிரகாப்லின் குறைக்கிறது. கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வுகளின் வழி அறியப்படுவது போல் பிரகாப்லின் சிகிச்சை குறிப்பிடத்தக்க பலனை அளிக்கிறது.
 • மூவளைய மனச்சோர்வகற்றிகள் (TCAs) : மூவளைய மனச்சோர்வகற்றிகள் சில ஏற்பிகளைத் தடுத்து, செரோடோனின் மற்றும் நோர்பைன்ப்ரைன் மறுபயன்பாட்டையும் தடுக்கிறது. இதன் மூலம் வலிதரும் தூண்டல் தடுக்கப்படுகிறது. எடுத்துக்காட்டுகள், அமிற்றிப்டைலின், நோர்ட்ரிப்டைலின், திரிபிரமைன் மற்றும் இம்ப்ரமைன். வெனலாஃபேக்சின் மற்றும் டியூலோசெட்டைன் போன்ற செரடோனின் நோரோடிரனலின் மறுபயன்பாடு தடுப்பிகள், பின்னக்கி நரம்புவலி சிகிச்சைக்கு நம்பிக்கை அளிக்கும் முடிவுகளை அளித்துள்ளன. சில நோயாளிகளுக்குப் பிற மனச்சோர்வகற்றிகள் ஒத்துக்கொள்ளாதபோது வெனலாஃபேக்சின் சில நன்மைகள் அளிப்பதாக அண்மை ஆய்வுகள் நிரூபித்துள்ளன. ஒற்றை மருந்துகள் முழு பலன் அளிக்காமல் இருப்பதாலும் பக்க விளைவுகளை ஏற்படுத்துவதனாலும் மருந்துகளை இணைத்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. எ-டு. நோர்ட்ரிப்டைலின் மற்றும் காபாபெண்டின்.
 • நரம்புத் தூண்டிகள்: மார்பைன் மற்றும் டிரமடால் பின்னக்கி நரம்புவலியைத் தீர்ப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.  தற்போதைய ஆய்வுகள் மூவளைய மனச்சோர்வகற்றிகளை விட நரம்பித்தூண்டிகள் சிறப்பாக செயல்புரிகின்றன எனக் கண்டறிந்துள்ளன.

மேல்மருந்து சிகிச்சை:

மண்டலம் சார் சிகிச்சைகளில் பக்க விளைவுகள் இருப்பதால் மேல்மருந்துகள் மேல் கவனம் திரும்பியுள்ளது. இது வசதியானதும் நோயாளியாலேயே பயன்படுத்தத் தக்கதும் ஆகும். அடிக்கடி பிரயோகிக்க வேண்டியதில்லை. தோலால் மட்டாக உறிஞ்சப்படுவதால் மண்டலத்துக்குள் குறைந்த அளவே எடுத்துக்கொள்ளப்படுகிறது. நோயாளியின் ஒத்துழைப்பும் அதிகரிக்கிறது.

பகுதிசார் மேல்சிகிச்சையில் அடங்குவன:

 • லிடோகேய்ன்: பகுதி சார் நரம்புநோய் வலிக்கு 5% லிடோகேய்ன் பூச்சு பாதுகாப்பானது. இது விளிம்பை இலக்காகக் கொண்ட வலிநிவாரணி ஆகும். மிகவும் பாதுகாப்பானது.
 • கேப்சாய்சின்: தனியாக அல்லது பிற மருந்துகளுடன் சேர்த்து 8% கேப்சாய்சின் விளிம்பு நரம்புநோய் சிகிச்சைக்கும் பயன்படுத்தப்படுகிறது. இது சிவப்புறல் மற்றும் வலி போன்ற பக்க விளைவை ஏற்படுத்தக் கூடும்.
 • மேல் மற்றும் அகநாசி வலிநிவாரண மருந்தியல்சிகிச்சை: மண்டலம் சார் சிகிச்சைக்குப் பதிலாக இதனைப் பயன்படுத்தலாம். அகநாசி 10 கீட்டாமைனை மேல்மருந்துகளான  6% காபாபெண்டின், 10% கீட்டோபுரபேன், 5% லிடோகெய்ன் அல்லது 10% கீட்டமைனோடு சேர்த்து பயன்படுத்தலாம்.
 • காபாபெண்டின்: 6% காபாபெண்டின் களிமப் பூச்சு முயற்சி செய்யப்பட்டது.  இது பின்னக்கி நரம்புவலி நோய்க்கான அண்மைக் கால சிகிச்சை. காபாபெண்டின் மேல்மருந்து அறிகுறிகளை விரைவாக சீராக்குவது கண்டறியப்படுள்ளது.
 • அகத்தோல் மின் நரம்புத் தூண்டல் (TENS):  பின்னக்கி நரம்புவலி மேலாண்மையில் இது அண்மைய வளர்ச்சி. மருந்தியல் சிகிச்சை பலன் அளிக்காத போது இது முயற்சி செய்யப்படுகிறது. இதனால் கணிசமாக வலி குறைகிறது. எவ்வகை சிகிச்சையிலும் பின்னக்கி நரம்புவலியை முற்றிலுமாகத் தடுக்க முடியாது. ஆனால் இம்முறையில் பலன் அதிகம் கிடைக்கிறது.
 • கேளாவொலி-வழிகாட்டும் தசைத்தோல் விளிம்பு நரம்படைப்பு: மிகத்துன்புறுத்தும் மற்றும் சிகிச்சைக்குக் கட்டுப்படாத வலியுள்ள ஒரு நோயாளி தெரிவுசெய்யப்படுகிறார். இச்சிகிச்சை மூலம் அறிகுறிகள் குறைகிறது என கண்டறியப்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சை:

ஸ்டீரியோடேக்சிக் டிரைஜெமினல் டிராக்டோடோமி மற்றும் டார்சல் ரூட் எண்ட்றி ஸோன் போன்ற அறுவை சிகிச்சைகளைப் பயன்படுத்தப்படலாம்.

 

 • PUBLISHED DATE : Mar 26, 2019
 • PUBLISHED BY : NHP Admin
 • CREATED / VALIDATED BY : R. Davidson
 • LAST UPDATED ON : Mar 26, 2019

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.