Dementia.png

முதுமை மறதி

முதுமை மறதி ஒரு தனி நோய் அல்ல. அறிவாற்றல் சீர்குலைவு தொடர்பான நோய்களின் மொத்தத்தையே இது குறிக்கிறது. நினைவாற்றல் பலவீனம், ஆளுமை மாற்றம், அறிவாற்றல் வலுவிழப்பு ஆகியவையே இதன் இயல்புகள்.

நினைவாற்றல், கவனிக்கும் திறன், மொழி, பிரச்சினை தீர்க்கும் திறன் ஆகிய அறிவாற்றல் தொடர்பான பகுதிகள் பாதிக்கப்படும்.

பொதுவாக அறிகுறிகள் ஆறு மாதத்திற்காவது நீடித்தால் மட்டுமே நோயைக் கண்டறிய முடியும்.

குறைந்த கால அளவிற்கு இருக்கும் அறிவாற்றல் செயலிழப்பு சித்தப்பிரமை எனப்படும். நினைவாற்றல் இழப்பு அல்லது அறிவாற்றல் குறைபாட்டிற்கான நிரூபிக்கக்கூடிய சான்றுகளைக் கொண்டே முதுமை மறதி கண்டறியப்படுகிறது. நோய்க்காரணிகளின் அடிப்படையில் முதுமை மறதி மீளக்கூடியது அல்லது மீளக்கூடாதது என வகைப்படுத்தப் படுகிறது.

References: www.alzheimers.org.uk
www.who.int
www.health.gov.bc.ca
www.ninds.nih.gov

முதுமை மறதி நினைவாற்றலை சுருக்குவது மட்டுமன்றி கீழ்க்காண்பவற்றைக் குறைக்கவும் செய்கிறது:

  • கற்க, காரணகாரியங்களை அறிய, கடந்த காலத்தை நினைவு வைத்துக் கொள்ள அல்லது நினைவுக்குக் கொண்டு வர
  • சிந்தனை, உணர்வு, செயல் வடிவங்களை இழத்தல்
  • ஆளுமையிலும் மனநிலையிலும் மாற்றம்
  • சரியான சொற்களை பயன்படுத்துவதில் சிக்கல்

Reference: www.nhs.uk

மூளையில் ஏற்படும் சிதைவினால் முதுமை மறதி உண்டாகிறது. முதுமை மறதியின் பொதுவான காரணம், அல்சைமர் நோய், முன்—பக்க மூளை மறதி, லூயி பொருள் முதுமை மறதி போன்ற நரம்புச் சிதைவு நோய்களே. இந் நோய்களால் மூளை உயிரணுக்கள் வழக்கத்தை  விட வேகமாக சிதைந்து இறந்து போகின்றன. இதனால் ஒருவரின் மனத்திறனும் சில வேளைகளில் உடல்திறனும் குறைகின்றன. மூளை அணுக்களின் படிப்படியான மாற்றமும் சிதைவும் மூளைக்குள் கட்டப்படும் அசாதாரணமான புரதங்களின் விளைவால் ஏற்படுகின்றன.

ஒவ்வொரு வகையான நரம்புச்சீர்குலைவு மூளைமறதியிலும் வெவ்வேறு வகையான அசாதாரண புரதங்கள் காணப்படுகின்றன. பெரும்பாலும் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து நேரடியாக மரபு ரீதியாக இவை ஏற்படுவதில்லை. ஆயினும் அல்சைமர் நோய் மற்றும் முன் – பக்க மூளை முதுமை மறதி ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட ஒரு சிலருக்கு குடும்ப அடிப்படையிலும் உண்டாகலாம்.

மூளை இரத்த ஓட்டம் தடைபடும் போது இரத்த நாள முதுமை மறதி ஏற்படுகிறது. இரத்தம் குறைவு படும்போது மூளையணுக்கள் செத்து மூளை சிதைவுறுகிறது.

Reference: www.nhs.uk
 

ஆறு மாதத்துக்காவது நீடித்த அறிகுறிகள் இருந்தால் மட்டுமே பொதுவாக நோய்கண்டறிதலை உறுதிப்படுத்த முடியும்.

அறிவாற்றல் சோதனை: குறும்மனநிலைச் சோதனை (எம்.எம்.எஸ்.இ) அல்லது ஃபால்ஸ்டெய்ன் சோதனை ஒரு 30-குறிப்புகள் கொண்ட கேள்விபதில் சோதனையாகும். அறிவாற்றல் சிதைவைக் கண்டறிய இது நடத்தப்படுகிறது. பொதுவாக இது முதுமை மறதிக்கும் பயன்படுத்தப் படுகிறது (30 குறிப்பு கேள்வித்தாள்)

கணினி வரைவி, காந்த அதிர்வு பிம்ப வரைவி ஆகியவைப் பொதுவாக  பயன்படுத்தப் பட்டாலும், நரம்பியல் சோதனைகளில் பெரும் பிரச்சினைகளைக் காட்டாத (பக்கவாதம் அல்லது பலவீனம்) நோயாளிகளுக்கு இவை முதுமை மறதியோடு தொடர்புடைய வளர்சிதை பரவல் மாற்றங்களைத் துல்லியமாகக் காட்டுவதில்லை.

பெரும்பாலான முதுமை மறதி வகைகளைக் குணப்படுத்த முடியாது. ஆனால் பிரச்சினைகளைக் கையாள மருத்துவர் உதவ முடியும். டோனேபெஜில் (donepezil) போன்ற அசெட்டைல்கோலிநெஸ்ட்டெரேஸ் தடுப்பான்கள் (Acetylcholinesterase inhibitors) பயனுள்ளவைகளாக இருக்கும்.

செயல்முறைசிகிச்சை: முதுமைமறதி கோளாறோடு வாழும் செயல்முறைகளைப் பற்றி  மருத்துவர் ஆலோசனை கூறலாம். மருத்துவ உடற்பயிற்சியாளர்கள் நிலைமைகளின் மாற்றங்களுக்கு ஏற்ப உடல் இயக்கத்தையும் தினசரி வாழ்க்கையையும் தழுவிக் கொள்ளும் வழிமுறைகளை பற்றிய பயிற்சி அளிப்பர்.

Referenceswww.nhs.uk
www.alzheimers.org.uk

முதுமை மறதி வராமல் தடுப்பதே அது வளராமல் தடுப்பதாகும்:

  • சரியான வாழ்க்கை முறை
  • சரியான உணவு
  • வாசிப்பு போன்ற மன செயல்பாடுகள் உடல் பயிற்சிகள்

  • PUBLISHED DATE : Apr 21, 2015
  • PUBLISHED BY : NHP CC DC
  • CREATED / VALIDATED BY : NHP Admin
  • LAST UPDATED ON : Jun 04, 2015

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.