உலுக்கப்பட்டக் குழந்தை நோய்த்தாக்கம்

உலுக்கப்பட்டக் குழந்தை நோய்த்தாக்கம் என்பது குழந்தைகளை முறையற்று நடத்தும் ஒரு வடிவத்தின் வெளிப்பாடு. விபத்தல்லாத முறையில் ஏற்பட்ட மூளைக் காயம். இது நரம்பு, அறிவு மற்றும் பிற செயல் குறைபாடு. விழித்திரை கண்டறிதல் மட்டுமே ஒரே வெளிப்பாடு. பின்னர் ஒரு கண்சிகிச்சை நிபுணர் முதலில் அதைக் கண்டறிகிறார். நேர்வுகள் முற்றிலுமாக மீள்பார்வை செய்யப்பட வேண்டும். மேலும் நிகழாமல் தடுக்கும் தடுப்பு உத்திகள் உருவாக்கப்பட வேண்டும். இந்த நோய் முக்கிய மருத்துவ மற்றும் சட்ட ரீதியான தாக்கங்களைக் கொண்டது. ஏனெனில் குழந்தைக்கு உயிர் ஆபத்து உள்ளது.

விபத்தல்லாத முறையில் காயம் உட்பட குழந்தைகளை மோசமாக நடத்துதல், குழந்தைகள், குடும்பம் மற்றும் பராமரிப்பு நல்குவோர்க்கும்  பிரச்சினை அளிப்பது ஆகும். தவறாக நடத்துவதன் மூலம் கடுமையான நேர்வுகளில் மரணம் கூட நேரலாம். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பல வகையான அறிகுறிகள் காணப்படலாம். பொதுவான நச்சுக் காய்ச்சல் முதற்கொண்டு மரணம் நேரும் முன்னர் காணப்படும்  செயலற்றத் தன்மை வரை இருக்கக் கூடும்.

தவறாக நடத்தப்பட்டமை வெளிப்படையாகப் புலனாவதில்லை. சுகாதாரப் பராமரிப்பாளர்கள் கவனமாக இதைக் கண்டு பிடித்து, பாதிப்படைந்த குழந்தையின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பை உறுதி செய்ய வேண்டும். குடும்பத்துக்குத் தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும். நிகழ்வை பொருத்தமான அதிகாரிகளுக்கு அறிவித்து மீண்டும் நிகழாமல் தடுக்க வேண்டும்.

1946-இல் கேஃபே ‘தலையதிர்வு உலுக்கப்பட்டக் குழந்தை நோய்த்தாக்கம்’ என்று ஒரு தொகுதி அறிகுறிகளை வருணித்தார். குழந்தை மூளை நடுஉறையடி மற்றும் மூளை மற்றும் தண்டுவடச்சவ்வு சார், இழுவை வகை இடைவளரி (எலும்புமுனைப்பகுதி மற்றும் குறுகிய எலும்புக்காம்புக்கும் நடுவில் இருக்கும் அகன்ற பகுதி அல்லது வளர்ச்சித் தட்டு) முறிவு மற்றும் விழித்திரைக் குருதிக்கசிவு ஆகியவை இந்த அறிகுறிகளில் அடங்கும். இத்தகைய காயத் தொகுதிகள் பல குழந்தைகளில் காணப்பட்டாலும் வெளிப்பரப்பில் எந்தக் காயமும் இல்லை. குழந்தைகளின் தலையைப் பெரியவர்களோடு ஒப்பிட்டு இக்காயங்கள் வளர்ச்சி வித்தியாசங்கள் எனக் கருதப்பட்டன. குழந்தைகளில் தலை மொத்த உடல் எடையில் 25% ஆகும். பெரியவர்களில் இது 10%. மேலும், குழந்தைகளுக்கு பலவீனமான கழுத்துத் தசை, மூளையில் அதிக நீர், மற்றும் மோசமான இயக்குதசை கட்டுப்பாடு காணப்படும். இதனால் கடுமையான உலுக்கலால் அவர்கள் காயம் அடையும் சாத்தியக் கூறு அதிகம்.

குறிப்புகள்:

http://www.medscape.com/viewarticle/515880

http://emedicine.medscape.com/article/1176849-overview

http://emedicine.medscape.com/article/344973-overview

http://eyewiki.org/Shaken_Baby_Syndrome

Caffey J. On the theory and practice of shaking infants: its potential residual effects of permanent brain damage and mental retardation Am J Dis Child 1972; 124: 161-169.

Fulton, D.R. (2000). Shaken baby syndrome Critical care Nursing Quarterly, 23(2), 43-50.

American Academy of Paediatrics Committee on Child Abuse and Neglect (2001).Shaken baby syndrome: rotational cranial injuries-technical report. Paediatrics108(1), 206-210.

 

 

 

மிகவும் கடுமையானது முதற்கொண்டு மிக இலேசானது வரை பரந்த அளவிலான அறிகுறிகளை உலுக்கப்பட்டக் குழந்தை நோய்த்தாக்கம் காட்டும்.

கடுமை குறைந்த நேர்வுகள்:

பெற்றோர் அல்லது பராமரிப்பாளர் அளிக்கும் குழந்தையைப் பற்றிய அறிகுறிகள்:-

 • மோசமான உணவூட்டல்
 • வாந்தி
 • சோம்பல்
 • எரிச்சல்
 • வெப்பக் குறைவு அல்லது குளிர்
 • வளர்ச்சியில் பொதுவான தேக்கம்
 • அதிகத் தூக்கம்
 • புன்னகைக்க இயலாமை

அறிகுறிகள் சில நாட்கள் அல்லது வாரங்கள் நீடிக்கும். பெற்றோர் அல்லது பராமரிப்பாளருக்கு இவை பிரச்சினையாகவும் அசாதாரனமாகவும் தோன்றும். இருப்பினும் கவனம் மேற்கொள்ளப் படும் அல்லது படுவதில்லை. இவை குறிப்பற்ற அம்சங்கள். முக்கிய நோய் அல்லது வலி சம்பந்தப்பட்டதாகக் கூட இருக்கலாம். அடிப்படைக் காரணம் அறியப்படாமலேயே தானாகத் தீர்ந்தும் போகலாம்.

மேலும் கடுமையான நேர்வுகள்:

குழந்தை உயிருக்கு ஆபத்தான மற்றும் நரம்பியல் கோளாறுகளுக்கான அறிகுறிகளைக் காட்டக் கூடும். ஒரு கடுமையான உலுக்கலுக்குப் பின் உடனடி மருத்துவ சிகிச்சை கேட்கப்படலாம் அல்லது இல்லாமலும் போகலாம். பெற்றோர் அல்லது காப்பாளர் சரியாகிவிடும் என்ற எதிர்பார்ப்பில் குழந்தைக்கு படுக்கையில் ஓய்வளிப்பர். இதன் காரணமாக ஓர் ஆரம்ப சிகிச்சைக்கு வழி இல்லாமல் போகக்கூடும்.

சிகிச்சையில் குழந்தைக்குக் காணப்படும் அறிகுறிகள்:-

 • மூச்சுவிடுவதில் சிரமம் அல்லது இரவில் மூச்சுத்திணறல்
 • நினைவாற்றல் குறைதல்
 • வலிப்புகள்
 • குறை இதயத் துடிப்பு
 • உச்சிக்குழி புடைத்தல், உள்மண்டையோட்டு அழுத்தம் அதிகரிப்பைக் காட்டலாம்.
 • முழு இதயக்குழல் செயலிழப்பு-செயற்கை சுவாசம் தேவைப்படலாம்.

 

 

காயங்களால் ஏற்படும் மரணங்களுக்கு தலைக்காயங்களே முக்கியக் காரணங்கள்.  இவையே குழந்தைகளைத் தவறாக நடத்துவதனால் விளையும் மரணத்துக்கான முக்கியக் காரணம். குழந்தைகளுக்கு ஏற்படும் கடுமையான காயங்கள் அரிதாகவே விபத்தினால் ஏற்படுபவை. சாலை வாகன விபத்து என்பன போன்ற தெளிவான காரணங்கள் இருந்தால்தான் அவ்வாறு முடிவெடுக்க முடியும்.

பொதுவாகப் பெரும்பாலான உலுக்கப்பட்ட குழந்தை நோய்த்தாக்கம் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடமே காணப்படுகின்றன. குழந்தைகள் அழுதல் அல்லது எரிச்சல் உண்டாக்குதல் போன்றவைகளால் பொறுமை இழந்து அல்லது எரிச்சல்படுவதனால் குழந்தைகள் பெரும்பாலும் இவ்வாறு உலுக்க அல்லது குலுக்கப் படுகின்றனர்.

விபத்தல்லாத காயங்களுக்கான ஆபத்துக் காரணிகள்:

 • இளம்பெற்றோர்கள்
 • நிலையற்றக் குடும்பச் சூழல்
 • குறைந்த சமூகப்பொருளாதார நிலை
 • குழந்தைகளைப் பேணுவதில் எதார்த்தமற்ற எதிர்பார்ப்புகள்
 • குழந்தை முதிர்ச்சி குறைவு அல்லது ஊனம்
 • விறைப்பான நடவடிக்கைகள் மற்றும் தூண்டல்செயல்பாடுகள்
 • போதாமை, தனிமை அல்லது மனச்சோவு உணர்வுகள்
 • புறக்கணிப்பு மற்றும் தவறான நடத்துதல் போன்ற குழந்தைப்பருவ எதிர்மறை அனுபவங்கள்
 • குழந்தையின் அழுகை கூட ஒரு பங்கு வகிக்கலாம்

 

மேலும், போதை மற்றும் குடும்ப வன்முறையில் பாதிக்கப்பட்ட பெற்றோர் அல்லது காவலர்களும் இந்த நோய்த்தாக்கத்தை ஏற்படுத்தும் ஆபத்துக் காரணிகள். தொலைக்காட்சி, வானொலி மற்றும் காணொளி விளையாட்டுகளில் பார்க்கும் வன்முறை கூட இதற்கு ஒரு காரணமாகலாம்.

 

பெற்றோர்கள் தங்கள் முழந்தையின் அடிப்படைத் தேவைகள் அல்லது இயற்கை வளர்ச்சி பற்றி அறியாது இருக்கலாம். பெற்றோர்களுக்கு எதார்த்தத்துக்கு மாறான  எதிர்பார்ப்புகள் அல்லது குழந்தை வளர்ச்சி நிலைகள் அல்லது திறன்கள் பற்றிய புரிதல் இல்லாமை இதற்குக் காரணம் ஆகலாம். குழந்தைகள் தாங்கள் விழித்திருக்கும் காலத்தில் 20% நேரம் அழும் என ஃபுல்ட்டன் கூறுகிறார். பெற்றோர் அல்லது பராமரிப்போர் அழுகையைக் குழந்தை நிறுத்தாத போது எரிச்சல் அடைவர். அமைதிப்படுத்துவதற்காக குழந்தையை உலுக்க நேரிடும். இது பெற்றோர் அல்லது பராமரிப்போரின் எரிச்சல் நிலையைப் பொறுத்து கூடவும் குறையவும் கூடும்.

 

குழந்தையைப் பேணுவோரின் முதிராமை, இளமை மற்றும் அனுபவமின்மை குலுக்கப்பட்டக் குழந்தை நோய்த்தாக்கத்திற்கு வழிகோலுகின்றன.

 

தவறாக நடத்தப் படுவதற்கு சாத்தியமான சூழ்நிலைகள்:

 

 • குழந்தையின் மருத்துவ வரலாற்றில் நம்பத்தகாமையும் தொடர்ச்சி இல்லாமையும்.
 • வீட்டில் புது பெரிய உறுப்பினர்
 • மருத்துவ சிகிச்சை நாடுவதில் தாமதம்
 • காயம் அல்லது நோய் உற்ற சமயத்தில் பொறுப்பான காப்பாளர் இல்லாமை
 • தவறான நடத்துதல் குறித்த முந்திய வரலாறு அல்லது ஐயம்
 • நரம்பியல் நிலையில் விளக்க அரிய மாற்றங்கள்
 • எதிர்பாராத அதிர்ச்சி மற்றும்/அல்லது இதயக்குழல் குளைவு
 • உடலில் ஆறும் பல்வேறு நிலையில் பல காயங்கள்

உலுக்கல் நிகழ்வின் போது, சுழல் ஆற்றல்களும் மூளையின் சுற்றுத்தசைகளோடு தொடர்பு பட்டவையின் வெவேறுபட்ட  நகர்ச்சியும் இணைப்புக் குழல்களைக் கிழித்து மூளை நடுவுரைஅடி குருதிக்கட்டை உருவாக்குகிறது. மேலும், சுழற்சி ஆற்றல்கள் மூளையின் நரம்பு இழைகளில் அழுத்தத்தைக் கொடுப்பதால் பரந்த நரம்பிழைக் காயங்கள் உருவாகின்றன. தலைக் காயம் ஒரு தொடரான நிகழ்வுகளை ஏற்படுத்துவதால் மூளை உயிர்வளிக் குறை, மூளை வீக்கம், உள்மண்டையோட்டு அழுத்தம் அதிகரித்தல் குழலிறுக்கம் போன்ற விளைவுகள் உண்டாகின்றன. மூளை நடுவுரையடி இரத்தக்கட்டின் இடப்பெயர்ச்சி செய்யும் விளைவால் மேலும் குருதியோட்டக் குறை நிகழ்கிறது. பொதுவாகக், குறிப்பான எந்த ஒரு விபத்துக் காயம் இல்லாமல் உள்மண்டையோட்டுக் காயம் இருந்தால் அது உண்டாக்கப்பட்ட காயம் என்பதற்கு சரியான சுட்டிக்காட்டி ஆகும்.

 

முறைபிறழ்ந்து நடத்தப்படும் குழந்தைகளில் பெரும்பாலானோர்க்குக் கழுத்து முள்ளெலும்பு புறத்தண்டுவட உறை குருதிக்கட்டி ஏற்படக் கூடும். மேலும், கீழ் மூளைத்தண்டு, மேல் தண்டுவடம் மற்றும் தண்டுவட நரம்பு வேர்களில் பரந்துபட்ட நரம்பிழைக் காயங்கள் உண்டாகலாம். கடும் குலுக்கலின் போது மண்டையோட்டுக் கழுத்து சந்திப்பு இழுக்கப்படும்போது தூக்கத்தில் மூச்சுத்திணறலும் அதனால் பர்ந்துபட்ட உயிர்வளிக்குறையும் ஏற்படலாம்.

விழித்திரை குருதிக்கசிவு எவ்வாறு ஏற்படுகிறது என்பதற்கான நிகழ்வுநுட்பம் முடிவாகத் தெரியவில்லை. கண்ணீர்மப்-புள்ளி இழுப்பின் மூலம் முடுக்க-எதிர்முடுக்க ஆற்றல்கள் சிதைவை உருவாக்குகின்றன போன்ற பல விளக்கங்கள் கூறப்படுகின்றன. கூரற்ற முனைக் காயம், காயத்தினால் உள்மண்டையோட்டு அழுத்தம் அதிகரித்தல், உள்மண்டையோட்டு  அழுத்தம் திடீரென அதிகரித்தல், உயிர்வளிக்குறை, சிலந்திப்படல குருதிக்கசிவு அல்லது இரத்த உறைவுப்பிறழ்வு போன்ற பல சாத்தியக்கூறுகளும் கூறப்படுகின்றன.

விழித்திரை குருதிக்கசிவின் எண்ணிக்கை, இடம், அளவு மற்றும் தன்மை நேர்வுக்கு நேர்வு வேறுபடுகின்றன. இருப்பினும் கடும் கசிவு கடும் மூளைக் காயத்துடன் தொடர்புடையனவாக இருக்கும்.

 

நோய் முன்னறிதலுக்காகவும் காரணத்தை நிர்ணயிப்பதற்காகவும் அறிகுறிகள் தெரிவது பயனுள்ளதாகும். நோய்வரலாறு, மருத்துவப் போக்கு மற்றும் நோய்கண்டறிதல் பிம்ப ஆய்வுகள் மூலம் காலம் சரியான முறையில் நிர்ணயிக்கப்படக் கூடும். துல்லியமாக இருந்தால் மருத்துவ வரலாறே கால எல்லையை அறிய சிறந்தது ஆகும். நோய்கண்டறியும் கதிரியக்க ஆய்வுகள் வழி தெரியவரும் உள்மண்டையோட்டு இரத்தப்புரத உடைவின் மூலம் காயம் ஏற்பட்ட பின் கடந்த காலம் மதிப்பிடப்படும்.

கொடுக்கப்படும் நோய் வரலாற்றோடு முரண்படும் உடலியல் பரிசோதனைகளே ஏற்படுத்தப்பட்டக் காய கண்டறிதலுக்கு அடிப்படை.

பெற்றோர் அல்லது காப்பாளர் குழந்தையின் காயம் பற்றி விளக்குதலில் மூன்று வகை இனம் காணப்பட்டுள்ளன:-

 • முதல் வகை:  பொதுவான சோர்வு, காய்ச்சல், குமட்டல், விழுதல் அல்லது போடப்படுதல் ஆகியவற்றை உள்ளடக்கிய குழந்தை நலம் குறித்த ஒரு விளக்கம் முதல் வகையில் அடங்கும்.
 • இரண்டாம் வகை: சாதனங்கள், பொம்மை போன்ற வீட்டுப் பயன் பொருட்களை அபாயகரமாகப் பயன்படுத்தியமை, முரட்டுத்தனமான விளையட்டு அல்லது காயம் எவ்வாறு ஏற்பட்டது என்பதற்கு விளக்கம் இன்மை ஆகியவை இரண்டாம் வகையான விளக்கத்தில் அடங்கும். நாட்கள் செல்லச் செல்ல பெற்றோரோ பாதுகாவலரோ விளக்கம் எதையும் கூறாமல் புனைகதைகளைப் புனைந்திருப்பர்.
 • மூன்றாம் வகை: மூன்றாம் வகையில் குழந்தை குலுக்கப்பட்டது அல்லது உலுக்கப்பட்டது ஒதுக்கொள்ளப்படும். இருப்பினும், குழந்தையை சமாதானப்படுத்தும் முயற்சி அல்லது ஒரு பொருள் மூச்சை அடைத்து விடாதபடி எடுக்கப்பட்ட முனைப்பு என வரலாற்றைக் கூறுவர். இரண்டு அல்லது மூன்று வகையான விளக்கங்கள் கிடைப்பதும் அரிதல்ல.  

வெளிப்படையான காயம் இல்லாமல் இருப்பது இவற்றின் தனித்துவ அடையாளம். இதனால் கடுமையான நேர்வுகளிலும் கண்டறிதல் தப்பிவிடக் கூடும். வெளிக்காயம் இல்லாததனால் சுகாதாரப் பராமரிப்பாளர் தவறான நடவடிக்கைகள் இருக்கக் கூடும் என்று சந்தேகப்படாமல் போவதற்கு வழி வகுக்கிறது. இந்நிகழ்வுகளில் வெளிக்காயம் ஏதாவது கவனிக்கப்பட்டால் அது முற்றிலுமாக ஆவணப்படுத்தப்பட வேண்டும்.

தொடர்ந்து உடல் பரிசோதனை செய்யும் போது மேலும் காயக் குறிகள் தென்படலாம்.

குறிப்பற்றச் சிராய்ப்புகள், விலா முறிவுகள், நீளெலும்பு முறிவுகள், வயிற்றுக் காயங்கள் மற்றும் விழித்திரைக் குருதிக்கசிவுகளை உள்ளடக்கிய பிற காயங்கள் மதிப்பிடப்பட்டு ஆவணப்படுத்தப்பட வேண்டும்.  புலனாய்வு நிழற்படங்கள் காயங்கள் பற்றித் தெளிவாக  மற்றும் துல்லியமாக ஆவணப்படுத்த உதவும்.

விழித்திரை குருதிக் கசிவு துல்லியமாகக் கண்டறியப்படுவது தகுந்த மருத்துவ பராமரிப்புக்கும் சட்டபூர்வமான நடவடிக்கைகளுக்கும் முக்கியம்.

மருத்துவ அம்சங்கள்

 • கண் வெளிப்பாடுகள்: உடல் சார்ந்த முறைகேடான நடவடிக்கைக்களின் அம்சம் தென்பட்டால் குழந்தையை ஒரு கண் நிபுணர் முழுப் பரிசோதனை செய்யவேண்டும். ஒரு குழந்தைக்குக் கீழ்க்காணும் அறிகுறிகள் காணப்படலாம்:-

புறக்கட்குழிக் காயம்: தோலடிக் குருதிக்கசிவு, இமைவீக்கம் அல்லது கட்குழிமுறிவு போன்றவை.

முன்பகுதிக்காயம்: முன்னறை குருதிக்கசிவு, கருவிழி பிதுக்கம், வெண்படலக் கீறல் காயம் அல்லது கண்புரை.

பின்பகுதிக் காயம்: கண்ணீர்மக் குருதிக்கசிவு, விழித்திரைக் குருதிக்கசிவு, விழித்திரை விடுபடல் அல்லது கண்நரம்புப் பீறல் விழித்திரைப் பிளவும் கூட இருக்கலாம்.

உலுக்கப்பட்ட குழந்தை நோய்த்தாக்கதோடு விழித்திரை குருதிக்கசிவு தொடர்புடையதா என்று ஒரு முரண்பட்ட கருத்தும் உண்டு. பிறவகையான தலைக்காயங்களிலும் பெரிய விழித்திரைக் குருதிக்கசிவு அரிதாகும். கடும் தலைக்காயங்களில் 1% இவை காணப்படும்.

கணினி வரைவியல் அலகிடல் (சிடி ஸ்கேன்) அல்லது காந்த அதிர்வுப் பிம்பம் (எம் ஆர் ஐ) ஆகியவற்றில் உள்மண்டையோட்டு புண்களைக் காண்பதற்கு 48 மணி நேரங்களுக்கு முன்னரே விழித்திரை குருதிக்கசிவைக் காணலாம்.

விழித்திரை குருதிக்கசிவு உலுக்கப்பட்டக் குழந்தை நோய்த்தாக்கத்தில் ஒரு முக்கிய வெளிப்பாடு ஆகும். 75-90% நிகழ்வுகளில் இது காணப்படும். பொதுவாக குழந்தைக்கு முன்விழித்திரை, இடைவிழித்திரை மற்றும் சார்விழித்திரை என்று மூன்று அடுக்குகளில் விழித்திரைக் குருதிக்கசிவுகள் இருக்கலாம். விழித்திரை குருதிக்கசிவுகள் எண்ண முடியாத அளவுக்கு அதிகமானவை. பின் துருவத்தில் இருந்து விழித்திரை விளிம்பு வரை பரந்திருக்கும்.

கடும் நேர்வுகளில் குலுக்கலால் நிரந்தரப் பார்வை இழப்பு ஏற்படலாம்.

இது தொடர்பான மூளைக்காயமும் இருக்கலாம். இதனால் விழிநடுக்கம், புறணிசார் பார்வையிழப்பு மற்றும் மண்டையோட்டு நரம்பு வாதம் ஏற்படக் கூடும்.

 • உள்மண்டையோட்டுக் காயம்: இது முக்கியக் கண்டறிதல் அமசம். மிகவும் பரவலான காயம் மூளை நடுவுறையடி இரத்தக்கட்டு. புற மூளைத்தண்டுவட உறை குருதிக்கட்டி அல்லது சிலந்திப்படலம்சார் குருதிக்கட்டி ஆகியவைகள் பிற காயங்கள்
 • அதிர்ச்சி மூளைக் காயம்: கடுமையான உலுக்கலால் மூளையின் சோற்றுத் திசுக்கள் நலிவடைதலால் திடீர் காயம் ஏற்பட்டு மூளை அதிர்ச்சி ஏற்படுகிறது. மூளைக்கு ஏற்பட்டுள்ள காயத்திற்கு ஏற்ப மருத்துவ அம்சங்கள் இலேசானதில் இருந்து கடுமையாக இருக்கும்.

மித அறிகுறிகள்:

-தலைவலி

-களைப்பு

-தலைச்சுற்றல்

-குழப்பம்

-மங்கல் பார்வை

-மனநிலை மற்றும் நினைவாற்றல் மாற்றங்கள்

 

கடும் அறிகுறிகள்:

-குமட்டலும் வாந்தியும்

-தூக்கத்தில் இருந்து விழிப்பதில் சிரமம்

-வலிப்புகள்

-ஒரு அல்லது இரு பாவை விரிதல்

-ஒருங்கிணைப்பு இழப்பு

-தொடர் அழுகை

-உணவருந்த மறுப்பு

 

 • எலும்பு முறிவுகள்: வெளிப்படையான காயங்கள் இல்லாமலும் எலும்பு முறிவுகள் இருக்கலாம். இவை உடலின் எந்தப் பகுதியிலும் நிகழக்கூடும். பொதுவாக நெடும் எலும்பு இடைப்பகுதி சில்லு முறிவு காணப்படும். குலுக்கலின் போது கட்டுப்பாடற்ற அசைவு ஏற்பட்டு எலும்பின் வளர்ச்சி தகட்டில் முறிவு ஏற்படும். விலா எலும்பு முறிவும் இருக்கலாம். ஆபத்தான நேர்வுகளில் விலாவே முறிவுக்கான பொதுவான இடம். மேலும், ஒரு குழந்தைக்கு விலாமுறிவு இருக்கிறது என்றால் அது உடலளவிலான தவறான செய்கையால்தான் இருக்கக்கூடும். பின் விலா முறிவு பெரும்பாலும் குலுக்கலினால் மார்பு முன்பின் அழுத்தப்படுவதால் ஏற்படுகிறது.

நோய்கண்டறியும் முறைகள்:

 • கதிரியக்கப் பரிசோதனை: கை, கால், நீள் எலும்புகள், மண்டையோடு, முதுகெலும்பு மற்றும் விலாப் பகுதிகளைக் கதிரியக்க முறைப்படி எலும்பு மதிபீடு செய்யப்பட வேண்டும். குழந்தையின் பொதுவான நிலை அனுமதிக்கும் போது உடனடியாக இது செய்யப்பட வேண்டும். கதிரியக்க ஆய்வுக்குப் பின் மீண்டும் இரண்டு வாரம் கழித்து தொடர் கவனிப்பாக எலும்பு மதிப்பீடு செய்யவேண்டும்.
 • ஒளிர்மின்வரைவி: ஒளிர்மின்வரைவி ஓர் அணுவியல் மருந்து சோதனை. இது எலும்பு வளர்சிதைமாற்ற அதிகரிப்பு அல்லது குறைவுப் பகுதிகளைக் கண்டறிகிறது. இதன் மூலம் விலா முறிவுகள் கண்டறியப்படுகின்றன. எலும்புக் கண்காணிப்பு தொடர்கவனிப்புக் காலமான இரண்டு வாரத்துக்குள் குழந்தையை ஒரு பாதுகாப்பற்ற இடத்துக்கு அனுப்ப வேண்டும் என்றால் அதற்கு ஒளிர்மின்வரைவி குறிப்பாகப் பயன்படுகிறது.
 • கணிக்கப்பட்ட வெட்டுவரைவியல் (சிடி அலகிடல்) : எலும்பு முறிவுள்ள குழந்தையின் பிம்ப மதிப்பிடலுக்கு இதன் முக்கியப் பங்கு உள்ளது. உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டிய காயங்களைக் கண்டறிய கணிக்கப்பட்ட  வெட்டு வரைவியல் உதவும். முதலில் முரண் இன்றி சோதிக்கப்படும். சிலந்திப்படல இடைவெளி உட்படக் கடும் குருதிக்கசிவு இருக்கும் இடங்கள் கண்டறியப்படும். சில கால கட்டத்துக்குப் பின் அல்லது துரித நரம்பு அறிகுறி மாற்றங்கள் இருந்தால் இச்சோதனை திரும்பச்செய்யப்பட வேண்டும்.
 • காந்த அதிர்வு பிம்பம் (எம் ஆர் ஐ): சோற்றுப்பகுதி குருதிக்கசிவு, கன்றல், வீக்கம், வெட்டு போன்ற உள்மண்டையோட்டு காயங்களை இதன் மூலம் கண்டறியலாம். தண்டுவடக் காயம் அல்லது சோற்றுப்பகுதிக் காயமும் கண்டறியப்படும். எந்த விபத்துக் காயங்களும் இல்லாத நிலையில் ஒரு பின் அரைக்கோளத்துக்குட்பட்ட மூளை நடுவுரையடி குருதி உறைவு உண்டாக்கப்பட்ட காயத்தை சுட்டிக்காட்டுகிறது.

காயம் பட்டதில் இருந்து கடந்துபோன காலத்தை சிடி அல்லது எம் ஆர் ஐ போன்ற கதிரியக்க கண்டறிதலில் காணப்படும் உள்மண்டையோட்டு இரத்தப்புரத உடைவு மூலம் மதிப்பிடலாம்.

(http://emedicine.medscape.com/article/344973-overview#a2).

 • தண்டுவட வடிப்பு: தண்டுவட வடிப்பின் மூலம் இரத்தத்தோடு கலந்த மஞ்சள் நிறமுடைய மூளைத்தண்டுவடத் திரவம் கிடைத்தால் மூளைக்காயம் பல மணி நேரத்துக்கு முந்தியது மற்றும் மூளத்தண்டுவடத் திரவத்தில் இருப்பது காயத்தினால் விளைந்த தண்டுவட வெடிப்பு அல்லவென்ற சந்தேகம் எழ வேண்டும்.

உலுக்கப்பட்டக் குழந்தை நோய்த்தாக்கத்தின் ஆய்வகச் சோதனைகள் குறிப்பாக இருப்பதில்லை மற்றும் கண்டறியக்கூடியவையும் அல்ல. 50% நேர்வுகளில் வெள்ளணு மிகைப்பு காணப்படுகிறது. ஊனீர் வேதியல் கண்டறிதல்கள் பொதுவாக இயல்பாக இருக்கும். ஆனால் அமில மிகைப்பு காணப்படலாம்.

பின்வரும் கோளாறுகளில் இருந்து உலுக்கப்பட்டக் குழந்தை நோய்த்தாக்கம் வெறுபடுத்திக் காணப்பட வேண்டும்:

 • விபத்துத் தலைக் காயம்
 • மழுங்கிய கண் காயம்
 • புர்ட்செர் விழித்திரை நோய்: இது ஒரு குருதிக்கசிவு மற்றும் குழல்தடை குழல்நோய். இதில் பல வெள்ளை விழித்திரை திட்டுகள் காணப்படும். கடும் பார்வை இழப்போடு விழித்திரைக் குருதிக்கசிவு இருக்கும். காயம், முதன்மை மழுங்கிய மார்பு அல்லது தலைக் காயங்கள் மற்றும் பல காயமற்ற நோய்களாலும் இது உண்டாகலாம்.
 • டெர்சன் நோய்த்தாக்கம்: இது உள் விழித்திரை குருதிக்கசிவுடன் சிலந்திவலைசார் குருதிக்கசிவோடு தொடர்புடையது.
 • இரத்தச்சோகை.
 • குருதியுறைவுப் பிறழ்ச்சி
 • இயல்பான குழந்தைப் பிறப்பு: இயல்பான பேற்றுக்குப் பின் உள்மண்டையோட்டு புண்கள் இன்றி விழித்திரை குருதிக்கசிவு அரிதாகக் காணப்படலாம். இக்குருதிக்கசிவு மகப்பேறு மற்றும் பிறப்பு சார்ந்ததாக இருக்கலாம். இவை எந்த வகையான மகப்பேற்றிலும் காணப்டலாம். ஆனால் இயல்பான யோனி அல்லது வெற்றிட முறை பிறப்பில் சாதாரணமாகக் காணப்படலாம்.

 

 

மருத்துவ மேற்பார்வையின் கீழ் மேலாண்மை செய்யப்பட வேண்டும்.

உலுக்கப்பட்டக் குழந்தை நோய்த்தாக்கத்தை இனம் காணுதல், ஆராய்தால், மேலாண்மை செய்தல் மற்றும் தடுத்தல் பல்துறை அணுகுமுறை தேவைப்படும் ஒன்று. சுகாதாரப் பராமரிப்பு, குழந்தைநலம், சட்டம், சமூகச் சேவைகள், கல்வி வல்லுநர்கள் மற்றும் சமுதாயம் ஆகியவற்றின் கூட்டு முயற்சி இதற்குத் தேவை.

கண்டறிதல், மேலாண்மை மற்றும் தடுப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு உலுக்கப்பட்டக் குழந்தை நோய்த்தாக்கத்தைப் பற்றிய அறிவை அளிக்க வேண்டும். ஆக்க பூர்வமான தடுப்பு முறைகள், உலுக்கலின் ஆபத்துகள் பற்றிய கல்வி மற்றும் கையாளத் தேவையான திறன்கள் சமுதாயத்துக்குப் புகட்டப்பட வேண்டும். இணைந்து செயலாற்றுவதில்தான் பாதிக்கப்பட்டக் குழந்தையின் எதிர்காலம் அல்லது பாதிக்கப்படும் ஆபத்துள்ள குழந்தைகளின் எதிர்கால நன்மை அடங்கியுளளது.

ஏற்படுத்தப்பட்ட காயத்தின் விளைவு விபத்தால் உண்டான காயத்தின் விளைவை விட மோசமானது. ஆகவே, உலுக்கப்பட்டக் குழந்தை நோய்த்தாக்கக் காயத்தின் வடிவத்தைக் காண ஒருவர் அதிக அளவு சந்தேகக் கண்கொண்டே பார்க்கவேண்டும். ஏற்படுத்தப்பட்ட மற்றும் விபத்துக் காயங்கள் மிகவும் வேறுபட்டாலும் மேலாண்மையில் அதிக வித்தியாசம் இல்லை.

உலுக்கப்பட்ட குழந்தை நோய்த்தாக்கம் என்ற சந்தேகம் எழுந்தால் சுகாதாரப் பராமரிப்பு வழங்குநர்  சட்ட ரீதியான அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். மருத்துவ வரலாறு கால ஓட்டத்தில் மங்குவதற்கு முன் தகுந்த அறிவிப்பு முழு ஆய்வுக்கு வழிவகுக்கும். குழந்தைப் பாதுகாப்பு சேவைகள் ஆரம்பத்திலேயே ஈடுபடுதல்  அதே பாதுகாப்பாளர்களிடம் உள்ள பிற குழந்தைகளைப் பாதுகாக்க உதவும்.

மருத்துவப் பராமரிப்பு:

கண்டறிதல் குழுவில் பல்துறை வல்லுநர்கள் இருப்பது போல் சிகிச்சைக் குழுவிலும் பாதிக்கப்பட்ட குழந்தையை இயல்புக்குக் கொண்டுவரும் வல்லுநர்கள் இருக்க வேண்டும். இதே குழுவே தொடர் பரிசோதனைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

ஆதரவு சிகிச்சையே மேலாண்மையில் முக்கியம்:

 • இரத்த அழுத்தம் மற்றும்  முக்கிய குறிகள் பேணப்பட வேண்டும்.
 • தேவைப்பட்டால் குழந்தைக்குச் செயற்கை சுவாசம் அளிக்க வேண்டும்.
 • உள்மண்டையோட்டு அழுத்தம் அதிகரித்தால் மேலாண்மை செய்ய வேண்டும்
 • உலுக்கப்பட்ட குழந்தை நோய்த்தாக்கத்துக்குப் பின் ஏற்படும் பார்வைத்தெளிவின்மை மற்றும் மாறுகண்ணுக்கு சிகிச்சை தேவைப்படலாம்.
 • வலிப்பு எதிர்மருந்துகள் தேவைப்படலாம்.
 • நரம்பு காயத்துக்குப் பின் உடலியல் மற்றும் பணியியல் சிகிச்சைகள் தேவைப்படலாம்.
 • பேச்சு மற்றும்/அல்லது மொழி பாதிக்கப்படிருந்தால் பேச்சுப்பயிற்சி சிகிச்சை பயனளிக்கும்.

அறுவை சிகிச்சை:

 • குணமடையாத கண்திரவ குருதிக்கசிவுக்கு
 • மூளை தண்டுவட உறை சார் குருதிக்கசிவு அல்லது விழித்திரை விடுபடலுக்கு

 

விபத்துக் காயத்தை விட ஏற்படுத்தப்பட்டக் காயத்தின் நோய்த்தன்மையும் மரண ஆபத்தும் மிகவும் மோசமான நிலையை உருவாக்கும். பெரும்பாலான நேர்வுகளில் நரம்பியல் மற்றும் அறிவுசார் கோளாறுகள் ஏற்படும்.

சிக்கல்களாவன:

 • புறணிசார் பார்வையிழப்பு: பின்மடல் கோளாறால் புறணிசார் பார்வையிழப்பு ஏற்படலாம்.
 • ஏற்பட்ட சிறுதலை: மூளை வளர்ச்சிக் குறைவால் காயத்துக்கு இரு மாதங்களுக்குப் பின் தலை அளவில் மாற்றம் காணப்படும்.
 • வலிப்புக் கோளாறுகள்
 • நீடித்த மூளைத்தண்டுவட உறை திரவம் திரள்தல்.
 • கீழறை விரிதல்
 • மூளை செயல்நலிவு
 • மூளைபாதிப்பு
 • இயக்க, அறிவு அல்லது கற்றல் கோளாறுகள்: தங்கள் வாழ்க்கையின் ஆரம்பக் கட்டத்தில் காயப்படுபவர்கள் பின்னர் காயப்படுபவர்களை விட குறைந்த வளர்ச்சியைப் பெறுகின்றனர். ஆறு வயதுக்கு முன்னர் மூளைக் காயம் பெறுபவர்கள் தங்கள் சக வயதினரை விட குறைந்தத் திறன் உடையவர்களாக இருப்பார்கள்.
 • நீண்டகாலக் கோளாறுகள்:

அல்சைமர் நோய்: வாழ்க்கையின் ஆரம்பக் கட்டத்தில் ஏறடும் ஒரு காயத்துடன் தொடர்புடையது அல்சைமர் நோய். கடும் காயத்தால் நோய் உருவாகும் ஆபத்து அதிகம்.

பார்க்கின்சன் நோய்: அடித்தொகுதி காயத்தால் பார்க்கின்சன் நோய் மற்றும் பிற அசைவுக் கோளாறுகள் உருவாகலாம்.

தாக்கல் முதுமைமறதி: (குத்துச்சண்டை வீரர் முதுமைமறதி அல்லது குத்துப்பெற்ற நோய்த்தாக்கம்): நீடித்த மூளைக்காய நோய் முதுமை மறதிக்கு வழிகோலும்.

காயத்துக்குப் பின்னான முதுமைமறதி: தாக்கல் முதுமைமறதி போன்ற அம்சங்கள் இருப்பினும் நீடித்த நினைவாற்றல் பிரச்சினையும் இருக்கும்.

 

 

குழந்தைகளைத் தவறாகவும் மோசமாகவும் நடத்துவதைத் தவிர்ப்பதை இலக்காகக் கொண்டு  பொதுமக்களை நோக்கிய செயல்பாடுகள் வருமாறு:

 • பொதுச்சேவை அறிவிப்புகள் மற்றும் விழிப்புணர்வுப் பிரச்சாரம்.
 • குடும்ப ஆதரவு மற்றும் வலிமைப்படுத்தும் திட்டங்கள்.

இரண்டாம் கட்டத் தடுப்பு:

 • இலக்குக் குறிக்கப்படும் பகுதிகளில் பெற்றோருக்குக் கல்வி: அழும் குழந்தைகளை எவ்விதம் கையாளுவது என்பது பெற்றோர் மற்றும் காப்பாளருக்குப் புகட்ட வேண்டிய கல்வியே முதன்மையான கல்வி. குலுக்கலின் ஆபத்தைப் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கி அழுகையைக் கையாளும் வழிமுறைகள் கற்றுக்கொடுக்கப்படுகின்றன. அழும்குழந்தையைக் கையாளும் முறை போதிக்கப்படுகிறது.
 • வீடுகளுக்க்ச் செல்லும் திட்டம்: இது ஒரு சேவை வழங்கும் உத்தியாகும். இதில் கல்வி, தாய்சேய் நலம், மற்றும் மனநலச் சேவைகள் குடும்பத்தைப் பலப்படுத்தவும் ஆதரிக்கவும் வழங்கப்படுகினன. பிறப்புக்கு முன்னாகச் செல்லும் போது பெற்றோரின் கையாளும் திறன், வலிமை மற்றும் திறன் மதிப்பிடல் மற்றும் பேற்றுக்குப்பின்னான மனச்சோர்வை பரிசோதித்தல் ஆகியவற்றிற்கு உதவுகிறது.
 • குறிப்பான இலக்குள்ள சமுதாயங்களில் குடும்ப ஆதார மையங்கள்:

மூன்றாம்கட்ட தடுப்பு தவறான போக்குள்ள குடும்பங்கள் மேல் கவனம் செலுத்தப்படுகிறது:

 • பெற்றோர் வழிகாட்டல் திட்டம்
 • தீவிர குடும்ப ஒற்றுமைச் சேவைகள்
 • குடும்பத்தை மேம்படுத்த மனநலச் சேவைகள்

இந்நோயையும் குழந்தைகளைத் தவறாக நடத்துவதையும் தடுக்க சுகாதாரப் பராமரிப்பாளர்கள் கருவியாகச் செயல்பட முடியும். குழந்தை மருத்துவர்கள் குடும்ப இயங்கியலில் ஆழ்பார்வை கொண்டவர்கள் மற்றும் குடும்ப ஊடாடல்களைக் கவனிக்கவும் செய்கின்றனர். பராமரிப்பாளர்க்கு ஏற்படும் மனவழுத்தம், அவர்தம் கட்டுப்பாடான நடத்தை, போதைப்பழக்கம் மற்றும் அழும்குழந்தைகளிடம் அவர்கள் நடந்துகொள்ளும் முறை ஆகியவற்றைப் பரிசோதிக்கும் போது தவறான நடத்தைக்கு ஆளாகக்கூடிய தனிநபர் மற்றும் குடும்பங்களை இனம்காண உதவும்.

தடுப்பு உத்திகளை உருவாக்கக் குழந்தை இறப்புப் புலனாய்வு மற்றும் மீள்பார்வைக் குழுக்களை உருவாக்குவது ஒரு முக்கிய காரணியாக அமையும். ஒரு குழந்தையின் மரணம் தடுப்பு உத்திகளை உருவாக்கவும் பிற குழந்தைகளைக் காப்பாற்றவும் வழிகோலுகிறது.

 

 • PUBLISHED DATE : Jan 31, 2019
 • PUBLISHED BY : NHP Admin
 • CREATED / VALIDATED BY : R. Davidson
 • LAST UPDATED ON : Jan 31, 2019

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.