சிலிக்கா நோய்

உலகில் மிக முக்கிய மான பணி இட நோய்களில் ஒன்று சிலிக்கா நோய் ஆகும். நீண்ட நாட்களாக மணல்துகளை சுவாசித்துக் கொண்டிருப்பதால் அதிகரித்துச் செல்லும் இந்நோய் உருவாகிறது. மூச்சடைப்பு, இருமல், காய்ச்சல் மற்றும் தோல் நீலம் ஆதல் இதன் தன்மைகள்.

சிலிக்கா (SiO2/சிலிக்கான் டையாக்சைடு) மண், பாறை மற்றும் படிகக்கல்லில் காணப்படும் படிகம் போன்ற ஒரு தனிமம் ஆகும். கல்லகழ்தல், உற்பத்தி மற்றும் கட்டுமான தொழில்களில் ஈடுபட்டிருப்பவர்களுக்குப் பெரும்பாலும் ஏற்படும் பணித்தல நோயாகும் இது.  தொழிற்சாலை மற்றும் பிற வழியாகவும் பிற மக்களுக்கும் இது ஏற்படுவதாக அறியப்படுகிறது.

சிலிக்கா மணம் அற்றது; எரிச்சலூட்டாது; உடனடி பாதிப்பு எதையும் உண்டாக்காது; எனவே அதிக அளவிலான கட்டற்ற சிலிக்காவை உள்ளெடுத்தாலும் உடனடியாக அதன் பாதிப்பை அறிய முடியாது. ஆனால் நீடித்த நாட்களாகப் பாதிப்புக்கு உட்பட்டால் நுரையீரல் நோய், நுரையீரல் நார்க்கட்டி, நுரையீரல் புற்று,  போன்ற பல நோய்கள் நுரையீரலையும் மூச்சுக்குழல்களையும் தாக்கும். இந்தியாவில் 10 கோடி உழைக்கும் மக்கள் இந்நோய் ஆபத்தில் உள்ளனர்.

1999-ஆம் ஆண்டு இந்திய மருத்துவ ஆராய்ச்சி பேரவை 30 லட்சம் மக்கள் சிலிக்காவால் பாதிக்கப்படும் அதிக ஆபத்தில் உள்ளதாக அறிவித்தது. இவர்களில், 17 லட்சம் பேர் சுரங்கம் மற்றும் கல்லகழ்வுத் தொழிலில் ஈடுபாட்டுள்ளனர்; 6 லட்சம் பேர் அலோக உற்பத்தி துறை சார்ந்தவர்கள்                 (கடினப் பொருட்கள், வடிவக் களிமண், கண்ணாடி மற்றும் காக்கைப்பொன் போன்றவை). பிற 7 லட்சம் பேர் உலோகத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள். மேலும் 53 லட்சம் தொழிலாளர்களும் சிலிக்கா பாதிப்பு ஆபத்தில் இருக்கின்றனர்.

இந்தியாவில் குஜராத், ராஜஸ்தான், பாண்டிச்சேரி, அரியனா, உத்தரப் பிரதேசம், பீகார், சத்திஸ்கர், ஜார்க்கண்ட், ஒரிசா மற்றும் மேற்கு வங்கத்தில் கட்டுமான மற்றும் சுரங்கத் தொழிலாளர்களிடம் சிலிக்கா நோய் அதிகமாக உள்ளது. இந்தியாவில் சிலிக்கா நோய் பல்வேறு விகிதங்களில் காணப்படுகிறது. ஆயுதத் தொழிற்சாலைகளில் 3.5 சதவிகிதமும் மாநில பென்சில் தொழிற்சாலையில் 54.6 சதவிகிதமும் உள்ளது. இதற்குக் காரணம் வெவ்வேறு தொழிற்சாலைகளில் காணப்படும் சிலிக்கா அடர்த்தி, பாதிப்பின் கால அளவு மற்றும் வேலைத்தேவையைப் பொறுத்து பாதிப்பு வேறுபடுகிறது.

சிலிக்கா நோய்க்கு நிரந்தரத் தீர்வு இல்லை. உடல் ஊனங்களை உருவாக்கும் அளவுக்கு இது ஆபத்தானது. குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் இல்லை ஆதலால் சிலிக்கா துகள் பாதிப்பை கட்டுப்படுத்துவதும், பாதிக்கப்பட்ட நோயாளிகளை ஆரம்பத்திலேயே கண்டறிவதும், தகுந்த மேலாண்மை மூலம் ஊனத்தைத் தவிர்ப்பதும்தான் தொழிலாளர்களைக் காக்கும் ஒரே வழி.

நல்ல காற்றோட்டம் கொண்ட பணி இடம், தூசி பாதிப்பில் இருந்து பாதுகாப்பு, நெரிசலைக் குறைத்தல், அடிப்படைப் பணிநல பராமரிப்பு ஆகியவற்றை இந்திய தொழிற்சாலைச் சட்டம் (1948) வழங்குகிறது. இந்தியாவில் இருந்து சிலிக்கா நோயை ஒழிப்பதற்கான சவால் இந்தியத் தொழிற்சாலை சட்டத்துக்குள் அடங்காத முறைப்படுத்தப்படாத தொழிற்சாலைகளைக் கட்டுப்படுத்துவதிலேயே உள்ளது. பணிச் சூழலை முறைப்படுத்தல், பாதுகாப்பு சாதனங்களை தொழிலாளர்களுக்கு வழங்குதல், தகுந்த கல்வி ஆகியவற்றை தேசிய மனித உரிமை ஆணையமும் வலியுறுத்துகிறது.

தொடர்பான இணைப்புகள்

IEC Booklets about silicosis in Hindi by ‘National institute of occupational health’ (NIOH), India may be seen at:

niohenvis.nic.in/booklets/silicosis.pdf      

niohenvis.nic.in/booklets/silicosis1.pdf

குறிப்புகள்

www.nioh.org/projects/silicosis.html

www.who.int/bulletin/volumes/94/10/15-163550/en/

icmr.nic.in/busep99.htm

/www.researchgate.net/publication/303400086_A_Perspective_on_Silicosis_in_Indian_Construction_Industry

nhrc.nic.in/Documents/Background%20Note%20on%20Silicosis.pdf

www.ilo.org/safework/areasofwork/occupational-health/WCMS_108566/lang--en/index.htm

nhrc.nic.in/Documents/NC_on_Silicosis_25_07_2014/Gujarat.pdf

மூச்சடைப்பு, இருமல், காய்ச்சல் மற்றும் தோல்நீலம் ஆகியவை இந்நோய்க் கூறுகள்:

 • உடல் பயிற்சிக்குப் பின் மூச்சடைப்பு மற்றும் ஒரு வறட்டு இருமலே சிலிக்கா நோயின் ஆரம்பக் கட்ட அறிகுறிகள். நோய் அதிகரிக்கும் போது மூச்சு விடுவதில் சிரமம், சளி, இருமலில் இரத்தம் ஆகியவை காணப்படும்.
 • குருதித்திரட்சி இதய செயலிழப்பால் நகங்களில் நீல நிறம் தோன்றும்.
 • நோய் அதிகரிக்கும் போது தூக்கப் பிரச்சினைகள், நெஞ்சு வலி, தொண்டையடைப்பு மற்றும் பசியின்மை காணப்படும்.
 • சிலிக்கா நோயாளிகளுக்குக் காசநோய் ஏற்படும் அபாயம் அதிகம்.

மூன்று வடிவங்களில் சிலிக்கா நோய் காணப்படும்: கடுமையானது, அதிகரித்தது மற்றும் நீடித்தது.

நீடித்த சிலிக்கா நோய்: இது பரவலான நோய் வடிவம். குறைந்த அளவிலான படிக சிலிக்காவின் பாதிப்பு 10 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேற்படும்போது இது உருவாகிறது. ஆரம்ப கட்டத்தில் அசாதரண நெஞ்சு எக்ஸ்-கதிர் படம் கிடைக்கிறது. பின் நோயாளிக்கு இருமலும் மூச்சுப் பிரச்சினையும் ஏற்படுகிறது.

அதிகரித்த சிலிக்கா நோய்: அதிக அளவிலான படிக சிலிக்காவின் பாதிப்பு 5-10 ஆண்டுகள் இருக்குமானால் இந்த வடிவம் வெளிப்படுகிறது.

கடும் சிலிக்கா நோய்: அதிக அளவிலான படிக சிலிக்காவின் பாதிப்பு குறைந்த காலத்திற்கு ஏற்படும்போது இது உருவாகிறது. நெஞ்சுவலி, காய்ச்சல் மூச்சடைப்பு காணப்படும். இந்த அறிகுறிகள் திடீரெனத் தோன்றுய்ம். சில மாதங்களிலே மரணம் ஏற்படக் கூடும்.

நுரையீரல் வடுக்களால் ஏற்படும் அறிகுறிகள் நுரையீரல் நோய் எனப்படுகிறது.

குறிப்புகள்:

www.lung.org/lung-health-and-diseases/lung-disease-lookup/silicosis/silicosis-symptoms-causes-risk.html

www.researchgate.net/publication/303400086_A_Perspective_on_Silicosis_in_Indian_Construction_Industry

silicosis.com/types/index.php

cmr.nic.in/busep99.htm#a3

 

படிகச் சிலிக்கா (SiO/சிலிக்கான் டையாக்சைடு) பாதிப்பால் சிலிக்கா நோய் உண்டாகிறது. சிலிக்கான் டையாக்சைடு சிலிக்கான் மற்றும் உயிர்வளி சேர்க்கையால் உருவாகிறது. சிலிக்கான் தீவிரமாக வினை புரியும் ஒரு தனிமம் ஆகும். அது தனி ஒரு தனிமமாக நிலைக்காது. உயிர்வளியோடோ அல்லது கட்டற்ற சிலிக்கா (SiO2) வடிவங்களோடோ அல்லது பிற தனிமங்களோடோ இணைந்து கல்நார் போன்ற சிலிக்கேட் வடிவங்களை உருவாக்கும். பெரும்பாலான பாறை வகைகள், களிமண் மற்றும் மணல் ஆகியவற்றின் பெரும்பகுதியும் சிலிக்கேட்டால் ஆனவையே.

பாறை, செங்கல், காறை (கான்கிரிட்) ஆகியவற்றில் படிக சிலிக்கா காணப்படுகிறது. இவற்றை அரைக்கும் போதும், அறுக்கும் போதும், உடைக்கும்போதும், துளையிடும் போதும் நுண்துகள்கள் உருவாகி கடுமையான சுவாசப் பிரச்சினைகளை உருவாக்குகின்றன.

பல தொழிற்சாலைகளுக்கு சிலிக்கா ஆலைகள் கச்சா பொருட்களை அளிக்கின்றன. கண்ணாடி மற்றும் செராமிக் உற்பத்திக்கு சிலிக்கா பொடி பயன்படுகிறது. சிராய்ப்பு சுத்திகரிப்பான், வண்ணப்பூச்சு மற்றும் ரப்பர் தொழிற்சாலையில்  மந்த வாயு வடிகட்டல், பற்பசை உற்பத்தி, சுத்திகரிக்கும் பொடி, சிராய்ப்பு நீக்கும் சோப்பு, வேதியல் வடிகட்டல், உலோகப் பளபளப்பு ஆகிய வற்றில் சிலிக்கான் பயன்படுகிறது. கண்ணுக்குப் புலப்படாத இத்தூசி 10 மைக்ரான் அளவுக்கே இருக்கும். இது நுரையீரலுக்குள் ஆழமான பகுதிக்குள் சுவாசிக்கும்போது செல்லக்கூடியது. நீடித்த காலங்களுக்கு இந்த சுவாசிக்கக்கூடிய படிக சிலிக்கா (RCS) தூசியை சுவாசிக்கும் போது  சிலிக்கா நோய், நுரையீரல் புற்று போன்ற கடுமையான நோய்கள் ஏற்படுகின்றன. மேலும் காசநோய் ஆபத்தையும் கூட்டுகிறது. சிறுநீரக நோய்க்கும் தன்தடுப்பு நோய்களுக்கும் இது காரணமாகலாம் என்று நம்பப்படுகிறது.

சிலிக்காவினால் பணித்தல பாதிப்பு: சிலிக்கா அரைத்தல் தொழிற்சாலை, ரத்தினக்கல், செராமிக், சிலேட் குச்சி, கல்லகழ்வு, சுரங்கம் போன்ற தொழிற்சாலைகளில் சிலிக்கா நோய் ஏற்படும் ஆபத்து உண்டு. சிலிக்கா பொடி இந்தியவில் சிறு தொழ்ற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படுகின்றது.

பணித்தலமற்ற இட பாதிப்பு: தொழிற்சாலை மற்றும் தொழிற்சாலை அற்ற பகுதிகளில் இருந்தும் மக்களுக்கு சிலிக்காவால் பாதிப்பு உண்டாகிறது.

 • தொழ்ற்சாலை மூலம் பணித்தலமற்ற இட பாதிப்பு: மேற்கண்ட தொழிற்ச்சலைகளில் இருந்து வெளியேறும் துகள்களால் சுற்றுப்புற மக்கள் பாதிப்படைகின்றனர். மத்தியப் பிரதேச மந்த்சாவூரில் உள்ள மாநில சிலேட் பென்சில் தொழிற்சாலையின் அருகில் வாழும் மக்களுக்கு சிலிகா நோயும் சிலிக்கா-காசநோயும் 12.6% மற்றும் 6.3 % ஆக உள்ளன. இரத்தினக்கல் தொழிலில் இருப்போருக்குக் குடும்பத்தார் உடபட ஆனைவரும் அருகில் வசிப்போரும் பாதிப்படைகின்றனர்.
 • தொழில் சார் இடமல்லாதவற்றில் இருந்து பணித்தலமற்ற பாதிப்பு: பாலைவனத் தூசி, மலைப்பிரதேச மணல் புயல் ஆகியவற்றால் இயற்கையாகவும் பாதிப்பு உண்டாகலாம்.  சில வகையான வேளாண்மை, கட்டுமானம், உடைப்பு வேலைகள் ஆகியவற்றாலும் சுற்றுச்சூழல் மசடைந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது.

படிக சிலிக்கா மற்றும் படிகக் கல் ஆகியவை நார்த்தூண்டிகள் ஆகும். சிலிக்கா தூளுக்கு சுவை, மணம் அல்லது அரிப்பு கிடையாது ஆதலால் எச்சரிக்கை இன்றி அது உடலுள் புகலாம். ஆகவே பெரும் அளவில் ஓர் உழைப்பாளி தூசியை உட்கொண்டு விடுகிறார். பூமியின் துகள் பரவலாகப் படிந்திருப்பதைச் சார்ந்து  அமைந்துள்ள அனைத்து பணிகளிலும் சிலிக்கா நோய் ஏற்படும் ஆபத்து உண்டு.

குறிப்புகள்

www.lung.org/lung-health-and-diseases/lung-disease-lookup/silicosis/silicosis-symptoms-causes-risk.html

www.who.int/occupational_health/publications/newsletter/gohnet12e.pdf

www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3683189/

www.ncbi.nlm.nih.gov/pubmed/21411429

icmr.nic.in/busep99.htm#a3

 

சிலிக்காவை சுவாசிக்கக் கூடிய பணித்தலப் பாதிப்புக்கு உட்படும் அல்லது பணித்தலம் இல்லாமலேயே பாதிப்புக்கு ஆளாகும் ஆபத்து இருப்பவர்களுக்கு இருமல், சளி, மூச்சுப்பிரச்சினை இருந்தால் அல்லது அறிகுறிகள் எதுவும் இல்லாமல் இருந்தாலும் (நீண்ட நாள் அத்தகைய இடங்களில் பணியாற்றியபின்) சிலிக்க நோய் உள்ளதா என்பதற்குச் சோதனைகள் மேற்கொள்ள வேண்டும்.

பணித்தல வரலாறு, உடல் பரிசோதனை (நெஞ்சு விரிதல் குறைவு, சுவாச ஒலி குறைவு, மிகை அதிர்வுப் பகுதிகள், நுரையீரல் பகுதிகளில் மிதமான படபடப்பு, அசாதாரண துரித மூச்சு) மற்றும் சிலிக்கா நோயை உறுதிப்படுத்தும் சோதனைகளில் அடங்குவன:

 • நெஞ்சு எக்ஸ்-கதிர்
 • நுரையீரல் செயல் சோதனை
 • சளி பரிசோதனை ( காசநோய் போன்ற தொடர்புடைய நோயறிய இது அவசியம். சிலிக்கோ காசநோயால் அவதிப்படுபவர்களின் சளியில் இருந்து காசநுண்ணுயிரியைக் கண்டறிதல் கடினம். காசநோய்ப்புண்ணின் சுவர்களை சிலிக்கா நார்கள் அடைத்து விடுவதால் நுண்ணுயிரிகள் சளிக்குள் கசிய வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது)
 • அதி விவர கணினி வரைவியல் அலகிடல் (நெஞ்சு)
 • நாடிக் கணிப்பு
 • நுரையீரல் உள் மதிப்பிடல்
 • நுரையீரல் திசுவியல்

குறிப்புகள்:

www.lung.org/lung-health-and-diseases/lung-disease-lookup/silicosis/diagnosing-treating-silicosis.html

icmr.nic.in/busep99.htm#a3

 

சிலிக்கா நோய்க்கு சிகிச்சை இல்லை. எனவே தடுப்பு முறையே சிறந்தது. சிலிக்கா நோய் கண்டறியப்பட்ட உடன் நுரையீரல் சிதைவின் அளவு முதலில் மதிப்பிடப்படுகிறது.

குறைந்ததில் இருந்து மிதமான நோய்க்கு மருந்துகள் தேவைப்படும். ஊக்க மருந்து மற்றும் குழல்விரிப்பிகள் உறிஞ்சல் ஆகியவற்றின் மூலம் காற்றுக் குழல்கள் தளர்த்தப்படுகின்றன. அவசர நேர்வுகளில் உயிர்வளி மற்றும் மூச்சு உதவி அளிக்கப்படுகிறது.

நோய் அதிகரித்துவிட்டால் நீடித்த நுரையீரல் நோய்களுக்குப் போன்றே மேலாண்மை செய்ய வேண்டும். இதற்குப் பல்துறைக் குழு அணுகுமுறை இன்றியமையாதது.

நோய் மேலும் மோசமாகாமல் தடுக்க வேண்டும். முதலில் மேலும் சிலிக்கா அல்லது அது போன்ற நுரையீரல் எரிச்சலூட்டிகள் தாக்காமல் பாதுகாக்க வேண்டும். இவற்றில் அகப்புற ஒவ்வாமை ஊக்கிகள், புகை ஆகியவை அடங்கும். ஆபத்து இல்லாத பணி இடங்களுக்கு மாற்றப்பட வேண்டும்.  பணியை மாற்றிக் கொள்ள ஆலோசனையும் வழங்கலாம். நீடித்த நுரையீரல் செயலிழப்பைத் தவிர்க்க உடல் ஊடுறுவா காற்றுப் பொறியமைப்புகள் மூலம் உயிர்வளி அளிக்கலாம். இன்னும் கடுமையான நேர்வுகளில் நுரையீரல் மாற்று சிகிச்சை தேவைப்படலாம்.

சிலிக்கா நோயாளிகளுக்கு ஆலோசனை:

 • புகைப்பதை விட்டுவிடவும்
 • ஆண்டுதோறும் தடுப்பு மருந்துகள் எடுக்கவும் (நியூமோகாக்கல் மற்றும் இன்ஃபுளூயன்சா போன்றவை)
 • சிலிக்கா பாதிப்பு மேலும் ஏற்படாமல் தடுக்கவும்
 • நோய் பற்றி அறிந்து கொள்ளவும்
 • நோய் அதிகரிப்பைத் தடுக்க ஒரு திட்டமிடல் அவசியம்

குறிப்புகள்:

www.lung.org/lung-health-and-diseases/lung-disease-lookup/silicosis/diagnosing-treating-silicosis.html

icmr.nic.in/busep99.htm#a3

 

 

பணித்தல சுகாதாரத்தில் சிலிக்கா நோய் தடுப்பு என்பது முக்கிய நடவடிக்கை. பணித்தலங்களில் சிலிக்கா துகள் உற்பத்தி ஆவதை கண்டறிந்து அவற்றைக் கட்டுப்படுத்தி ஒழிப்பதே சிலிக்கா நோயை தடுக்கும் சிறந்த நடவடிக்கை.

முதல் மற்றும் இரண்டாம் கட்டத் தடுப்பு அணுகுமுறைகளே சிலிக்கா நோயைத் தடுக்கும் சிறந்த உத்தியாகும்.

முதல்கட்டத் தடுப்பு: தூசி தடுப்புப் பொறியியல் முறையின் மூலம் சிலிக்கா நோய் ஆபத்தைத் தடுப்பது இதில் அடங்குகிறது. துகளால் பணித்தலப் பாதிப்பு ஏற்படாவிட்டால் சிலிக்கா நோய் உண்டாக வாய்ப்பில்லை.

இரண்டாம் கட்டத் தடுப்பு:  கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், ஊழியர்களுக்கு எதிரான நோய் ஆபத்து அறிதல், ஆரம்பத்திலேயே கண்டறிய ஊழியர் நலம் அறிதல் ஆகிய கண்காணிப்புகள் இதில் அடங்கும்.

முளையில் முறியடித்தல்:

தூசி உருவாதலை தடுக்கும் முறைகள்:

 • ஒழிப்பு
 • பொருள் மாற்று
 • சாதன செயல்முறையை மாற்றியமைத்தல்
 • சாதனங்களைப் பராமரித்தல்
 • ஈர முறைகள்
 • போதுமான வேலைப் பயிற்சிகள்

பரவல் பாதைக் கட்டுப்பாடு: ஆதார இடத்தில் தூசி உருவாவதைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால் அது ஊழியர்களைச் சென்றடையா வண்ணம் அதன் பரவல் பாதையில் கட்டுப்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

 • தனிப்பிரித்தல் (ஒரு மூடிடத்தில் செயல்முறையை நடத்துதல்)
 • அவ்வப்பகுதியில் வெளியேற்றம் (தூசிகள் உருவாகும் போதே அவை வெளியேற்றப்பட்டால் அவை பணி இடச் சூழலில் கலக்காது)
 • சுத்தம் (தூசி அடைவதை தவித்தல்)

ஊழியர் நிலையில் கட்டுப்படுத்தல்: போதுமான வேலை செயல்முறை, கல்வி (ஆபத்து போன்றவை), பயிற்சி, தனிநபர் பாதுகாப்பு சாதனம், தனிநபர் சுத்தம் மற்றும் சுகாதாரக் கண்காணிப்பு.

NIOH அல்லது பிற பாதுகாப்பு சாதன வல்லுநர்கள் பரிந்துரைக்கும் தனி நபர் பாதுகாப்பு சாதனங்களை ஊழியர்கள் பயன்படுத்த வேண்டும். முகமூடிகளின் பலன் மிகக் குறைவே. இதில் உள்ள துவாரங்களை தூசித் துகள் மூடிக் கொள்ளும். ஆகவே ஊழியருக்கு மூச்சுமுட்டு ஏற்படுவதால் தொடர்ந்து பயன்படுத்த முடிவதில்லை. மேலும் முக மூடிகள் சூடான மற்றும் ஈரப்பதம் கொண்ட தட்பவெப்ப நிலைகளுக்கு ஒத்து வருவதில்லை. பிற பலனளிக்கும் தூசிக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுடன் மூச்சுக் கருவிகளைப் பயன்படுத்த வேண்டும்.

சிலிக்கா துகள் பாதிப்பு ஆபத்து இருக்கக் கூடிய ஊழியர்களுக்கு அடிக்கடி சோதனை நடத்தி நுரையீரல் நோய் அறிகுறிகள் உள்ளனவா என கண்டறிய வேண்டும். ஒருங்கிணைந்த தொடர் சுகாதாரச் சோதனை மற்றும் தூசித் தடுப்பு நடவடிக்கைகள் நோய் ஏற்படுதலைக் கட்டுப்படுத்தும்.

பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காகத் தொழிற்சாலைகளைத் தொழில் பகுதிகளுக்கு மாற்ற வேண்டும்.

சிலிக்கா நோயைத் தடுக்கும் பரிந்துரைகள்:

 • சிலிக்கா படிகத் துகளின் ஆபத்துகளைப் பற்றி அறிந்து மக்கள் அத்தகையப் பணித்தலங்கள் அருகில் வசிப்பது/ பணிபுரிவதைத் தவிர்க்க வேண்டும்.
 • தூசியைப் பார்க்க முடியாது, ஆனால் அது பாதிக்கும் என்பதை மக்கள் அறிய வேண்டும்.
 • அடைபட்ட இடங்களில் தண்ணீர் தெளிக்க வேண்டும் அல்லது காற்றோட்ட வசதி செய்ய வேண்டும்.
 • காற்றோட்டம் அல்லது நீர்த்தெளிப்பு இரண்டுமே இல்லை எனில் நிர்வாகம் மூச்சுக் கருவிகளை வழங்க வேண்டும்.
 • தொடர் சுகாதாரச் சோதனை
 • உண்ணும் முன் குடிக்கும் முன் தூசி உள்ள இடங்களில் கைகழுவுதல்.
 • பணி முடிந்த பின் குளித்து சுத்தமான ஆடைகளை அணியவும்.

இந்தியாவில் பணியிட சுகாதாரத்தை வலிமைப்படுத்தும் நடவடிக்கைகள்:

இந்தியத் தொழிற்சாலைச் சட்டம் (1948): நல்ல காற்றோட்டமுள்ள பணிச்சூழல், தூசி பாதிப்பில் இருந்து பாதுகாப்பு, மிகைக் கூட்டம் குறைப்பு மற்றும் அடிப்படை பணி நல பராமரிப்பு ஆகியவற்றை இச் சட்டம் கண்டிப்பாக்குகிறது. சுரங்கச் சட்டம் (1952) மற்றும் தொழிற்சாலைச் சட்டம் (1948) ஆகியவற்றில் சிலிக்கா நோய்க்கு அறிவிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

கட்டுமானத் தொழிற்சாலை மேம்பாட்டுப் பேரவை (CIDC) : இந்திய அரசின் திட்டக் குழு (இப்போது நிதி ஆயோக்), இந்தியக் கட்டுமானத் தொழிற்சாலையுடன் இணைந்து இந்திய கட்டுமானத் தொழில் மேம்பாட்டுக்காக CIDC –யை அமைத்துள்ளது.

இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம், இரத்தினம் மற்றும் படிகக்கல் தொழிலாளர்களுக்கு சிலிக்கோ நோயைத் தடுக்கக் கூடிய உத்தியை உருவாக்க NIOH –ற்கு உதவி அளிக்கிறது.

சிலிக்கா நோய் சுகாதாரப் பராமரிப்பு அலுகுகள்: மாநில அரசுகள் சிலிக்கா நோய் ஆபத்துள்ள மாவட்டங்களில் இவ்வலகுகளை அமைத்துள்ளன. இங்கு இலவசமாக எக்ஸ்-கதிர் மற்றும் நுரையீரல் செயல் சோதனைகள் செய்யப்படுகின்றன. அரசு சாரா நிறுவனங்களின் உதவியுடன் சிலிக்காவை பயன்படுத்தும் தொழிற்சாலைகளில் தொடர் சோதனைகள் செய்யப்பட்டு நேரிய கண்காணிப்பு உறுதிசெய்யப்படுகிறது.

நுரையீரல் அழற்சியைத் தடுக்க NIOH –இன் தூசி காட்டுப்பாட்டு உத்திகள்: இங்கே சொடுக்கவும்.

குறிப்புகள்:

www.cdc.gov/features/preventing-silicosis/index.html

www.who.int/occupational_health/publications/newsletter/gohnet12e.pdf

www.cdc.gov/niosh/docs/96-112/default.html

www.ilo.org/safework/areasofwork/occupational-health/WCMS_108566/lang--en/index.htm

www.researchgate.net/publication/303400086_A_Perspective_on_Silicosis_in_Indian_Construction_Industry

nhrc.nic.in/Documents/NC_on_Silicosis_25_07_2014/Gujarat.pdf

icmr.nic.in/busep99.htm#a3

 

 

 • PUBLISHED DATE : Oct 05, 2018
 • PUBLISHED BY : NHP Admin
 • CREATED / VALIDATED BY : R. Davidson
 • LAST UPDATED ON : Oct 05, 2018

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.