தொண்டையழற்சி

கோரினேபாக்டீரியம் டிப்தீரியா எனப்படும் பாக்டீரியாவால் உண்டாகும் தொற்றுநோயே தொண்டையழற்சி ஆகும். அது முக்கியமாக தொண்டையையும் மேல் மூச்சு மண்டலத்தையும் பாதிக்கிறது. அது உருவாக்கும் நச்சு பிற உறுப்புகளையும் பாதிக்கும். ஒரு வகையான தொண்டையழற்சி தொண்டையையும் சில சமயங்களில் உள்நாக்கையும் பாதிக்கிறது. இன்னொரு வகை, தோலில் புண்களை உண்டாக்குகிறது. இவை வெப்ப மண்டலப் பகுதியில் (ஆண்டு முழுவதும் குறைந்தபட்ச வெப்பம் 18 ° சென்டி கிரேடாக இருக்கும்) பரவலாகக் காணப்படும். தொண்டையழற்சி  1-5 வயது குழந்தைகளைப் பொதுவாகப் பாதிக்கிறது. மிதமான வெப்ப நிலையில் (நான்கு பருவ காலம் உள்ளது: கோடை, இலையுதிர், குளிர் மற்றும் வசந்தம்) தொண்டயழற்சி குளிர்காலத்தில் ஏற்படும்.

தடுப்பூசி நோய்பாதிப்பையும் மரணத்தையும் வெகுவாகக் குறைத்துள்ளது. ஆயினும் விரிவாக்கப்பட்ட தடுப்பூசித் திட்டம் சரிவர செயல்படாத நாடுகளில் தொண்டையழற்சி இன்னும் குழந்தைகளுக்கு ஒரு சுகாதாரப் பிரச்சினையாக இருந்து வருகிறது. இந்தியா போன்று குறிப்பிட்ட இடம் மற்றும் இனத்திடம் உண்டாகும் நோய் அங்கும் இங்கும் குறுகிய நோய்த் தாக்கமாக உண்டாகிறது. 5-10 % நோயாளிகளுக்கு இது உயிருக்கு ஆபத்தானது. குழந்தைகளில் மரண விகிதம் அதிகம்.

தில்லியில் உள்ள தேசிய நோய்க்கட்டுப்பாட்டு மைய  (NCDC) ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்புத் திட்டம் (IDSP) இந்தியாவில் 2014-ஆம் ஆண்டு 7 தொண்டையழற்சி நோய்த்தாக்கம் ஏற்பட்டதாக அறிவித்தது.

குறிப்புகள்:

http://www.ncdc.gov.in/writereaddata/linkimages/Jan-March%20087398246488.pdf=

 http://www.ncdc.gov.in/writereaddata/linkimages/Newsltr0320156655589079.pdf

http://www.who.int/immunization/topics/diphtheria/en/

Park’s Textbook of Preventive and Social Medicine, 22nd Edition, Diphtheria, 151-153

இந்நோய் கடுமையாகத் தோன்றும். தொண்டைவலி, குறைந்த அளவுக் காய்ச்சல், கழுத்தில் சுரப்பிகள் வீங்குதல் ஆகியவை நோயியல்பு.

இரண்டு அல்லது மூன்று நாட்களில் தொண்டை அல்லது மூக்கில் ஒரு கட்டிப் படலம் உருவாகி மூச்சு விடவும் விழுங்கவும் சிரமம் ஏற்படும். இந்தக் கட்டியான சாம்பல் படலம் “போலிப்படலம்” எனப்படும்.

குரல்வளை தொண்டையழற்சியில் இருமலும் கரகரப்பான குரலும் இருக்கும்.

கடுமையான நேர்வுகளில் இந்த நச்சு இதய தசை அழற்சி அல்லது நரம்புக் கோளாறுகளை உண்டாக்கும்.

குறிப்பு:  http://www.cdc.gov/diphtheria/about/symptoms.html

கோரினேபாக்டீரியம் டிப்தீரியா என்ற பாக்டீரியாவால் தொண்டையழற்சி ஏற்படுகிறது. இது கிராம் பாசிட்டிவ் மற்றும் இடம்பெயரா உயிரியாகும். இது ஊடுறுவும் ஆற்றல் அற்றது. ஆனால் ஒரு சக்திவாய்ந்த புற நச்சை உற்பத்தி செய்கிறது. இந்த பாக்டீரியாக்கள் வெப்பம் அல்லது வேதிப்பொருட்களால் எளிதல் கொல்லப்படுகின்றன.

தொண்டையழற்சி நச்சு தொண்டை மற்றும் உள்நாக்கின் மேல் இறந்த திசுக்களால் ஆன ஒரு படலத்தை உருவாக்குகிறது. இதனால் சுவாசிக்கவும் விழுங்கவும் சிரமம் உண்டாகும்.

பரவல்:

சுவாச மண்டலம் மூலமாக ஒருவருக்கு ஒருவர் பெரும்பாலும் பரவுகிறது. தோல் புண் அல்லது பாதிக்கப்பட்டவரின் புண் கசிவால் அசுத்தமான பொருட்கள் வழியாக அரிதாகப் பரவலாம்.

நோயரும்புகாலம் 2-6 நாட்கள். சிலசமயம் இன்னும் நாள் பிடிக்கலாம்.

குறிப்பு: http://www.cdc.gov/vaccines/pubs/pinkbook/dip.html

உத்தேச சிகிச்சையை விரைவில் தொடங்குவது முக்கியம் என்பதால் மருத்துவ ரீதியான நோய்கண்டறிதல் பொதுவாக மேற்கொள்ளப்படுகிறது.

ஆய்வகச்சோதனையில் அடங்குவன:

அ) மருத்துவ மாதிரிகளில் இருந்து நுண்ணுயிரி தனிமைப் படுத்தப்படும் (தொண்டை மற்றும் மூக்கில் இருந்து எடுக்கப்படும் மாதிரிகள். தோலைப் பாதிக்கும் தொண்டையழற்சிக்கு தோல் புண்ணில் இருந்து மாதிரி சேகரிக்கப்படும்).

i)  மாதிரிகள் நுண்ணோக்கி மூலம் பரிசோதிக்கப்படும் ( கிராம் அல்லது ஆல்பெர்ட்ஸ் சாயமேற்றல் முறை)

 ii) திசு ஆய்வு – சந்தேகத்திற்குரிய டிப்தீரியா பாக்டீரியாவின் தனிமைப்படுத்தப்பட்ட பொருட்கள் கீழ்வரும் ஆய்வுக்கு உட்படுத்தப் படுகின்றன:

1.   உயிர்மாதிரி

2.   நச்சுப்பொருள் ஆய்வு (எல்க் சோதனை)

3.   எதிர் நுண்பொருள் ஏற்புத்திறன் ஆய்வு MIC முறை

4.   ஊனீர் ஆய்வுகள் – 10-14 நாட்களில் தனித்தனியாக சேகரிக்கப்பட்ட இணை ஊனீர் மாதிரிகளில் எதிர்பொருள் எதிரிய அளவு நான்கு மடங்காகக் காட்டுதல் (இரண்டு மாதிரிகளும் டிப்தீரியா நச்சனையம் அல்லது எதிர்நச்சு கொடுக்கப்படும் முன் சேகரிக்கப்பட வேண்டும்). இது ஒன்றில் மறைமுக இரத்தத்திட்டு சோதனை (IHA) அல்லது நொதியுடன் இணைந்த நோயெதிர்ப்பு ஈர்ப்பு மதிப்பீடு ( ELISA) முறையில் நடத்தப்படும்.

குறிப்பு: http://www.ncdc.gov.in/writereaddata/linkimages/Jan-March%20087398246488.pdf

நச்சின் பாதிப்புகளை சமன்படுத்தும் எதிர்நச்சுப் பொருட்களை அளித்தலும் பாக்டீரியாக்களைக் கொல்ல நுண்ணுயிர்க்கொல்லிகளை அளித்தலும் சிகிச்சையில் அடங்கும்.

எதிர்நச்சுப்பொருளை ஆரம்பத்திலேயே அளிப்பது, குறிப்பாக மூச்சு தொண்டையழற்சிக்கு, முக்கியமானது.

எதிர்நச்சுப் பொருளோடு தகுந்த நுண்ணுயிர்க்கொல்லியும் அளிக்கப்பட வேண்டும்.

சுவாச உதவியும் காற்றுப் பாதை பராமரிப்பும் தேவைக்கு ஏற்றபடி அளிக்கப்பட வேண்டும்.

நுண்ணுயிர்க்கொல்லிகள் அளித்து 48 மணி நேரம் கழித்துப் பொதுவாக இந்நோய் பரவாது.

தொண்டையழற்சியால் ஏற்படும் சிக்கல்களில் அடங்குவன:

-    காற்றுப்பாதை அடைப்பு

-    இதய தசை சிதைவு

-    நரம்பு அழற்சியால் நரம்பு சிதைவு

-    வாதம்

-    நுரையீரல் தொற்று ( சுவாச செயலிழப்பு அல்லது நிமோனியா)

குறிப்பு: http://www.cdc.gov/diphtheria/about/complications.html

குழந்தைகளுக்கு ஏற்படும் தொண்டையழற்சியைத் தடுக்கும் சிறந்த வழி அனைத்துக் குழந்தைகளுக்கும் தடுப்புமருந்து அளிப்பதுதான். இது இந்தியாவில் உலகளாவிய தடுப்புமருந்து திட்டத்தில் பரிந்துரைக்கப்படுகிறது.

ஒற்றை விளைவிய தொண்டையழற்சி தடுப்புமருந்து இல்லை. பொதுவாக பிற தடுப்பு மருந்துகளுடன் இணைத்து DPT தடுப்பூசி (தொண்டையழற்சி + கக்கல் இருமல் + நரப்பிசிவு) அல்லது ஐந்நோய் தடுப்பூசியாக (DPT+ நுரையீரல் அழற்சி B+ Hib தடுப்பூசி) அளிக்கப்படும்.

உலகளாவிய தடுப்புமருந்து திட்டத்தில் டி.பி.டி. 5 வேளையாகப் பரிந்துரைக்கப்படுகிறது. 6, 10, 14-வது வாரங்களில் முதல் மூன்று வேளைகள். 16-24 மாதத்திலும், 5-6 வயதிலும் அடுத்த இரு ஊக்க வேளை மருந்து. டி.பி.டி-யில் உள்ள கக்கல் இருமல் தடுப்பு மருந்துக்கு எதிர் அறிகுறிகள் இருந்தால் குழந்தை DT  தடுப்பு மருந்து அளிக்க வேண்டும்.

இளம் வயதினருக்கும் பெரியவர்களுக்கும் தொண்டையழற்சி தடுப்பு மருந்துடன் குறைந்த அடர்த்தியில் நரப்பிசிவு தடுப்பு மருந்தும் சேர்த்து அளிக்கப்படும் (Td தடுப்பு மருந்து).

இந்தியாவில் சில தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களில் ஐந்நோய் தடுப்பூசியும் அளிக்கப்படுகிறது.

தடுப்பூசி இடாத 7 வயதுக்கு மேற்பட்டோருக்கு உலக சுகாதர நிறுவனம் Td இணைப்பு தடுப்பூசியை 2 வேளைகளாகப் பரிந்துரைக்கிறது. 1-2 மாத இடைவெளிவிட்டும் 6-12 மாதம் கழித்து மூன்றாவது வேளையாகவும் இடலாம். அடுத்துவரும் ஊக்க வேளைகளை (ஒட்டு மொத்தம் ஐந்துவேளை) குறைந்த பட்சம் 1 ஆண்டு இடைவெளி விட்டு அளித்தால் நீண்ட நாள் நோய் பாதுகாப்பு கிடைக்கும்.

ஊக்க வேளை: அடிப்படை தடுப்பு மருந்துகளை எடுத்துக் கடைசி தடுப்பூசி 10 ஆண்டுகளுக்கு முன் எடுத்தப் பெரியவர்களுக்கு நரப்பிசிவு மற்றும் தொண்டையழற்சி இணைந்த ஊக்க தடுப்பு மருந்து கொடுக்க வேண்டும்.

குறிப்புகள்:

http://www.ncdc.gov.in/writereaddata/linkimages/Jan-March%20087398246488.pdf

http://mohfw.nic.in/WriteReadData/l892s/Immunization_UIP.pdf

http://www.cdc.gov/vaccines/pubs/pinkbook/dip.html

http://www.ncdc.gov.in/writereaddata/linkimages/February_Final_020862513827.pdf

http://www.nhp.gov.in/universal-immunization-programme-uip_pg

  • PUBLISHED DATE : Jan 25, 2016
  • PUBLISHED BY : Zahid
  • CREATED / VALIDATED BY : R. Davidson
  • LAST UPDATED ON : Jan 25, 2016

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.