Gonorrhea.png

மேகவெட்டை

மனிதர்களுக்கு உடலுறவின் மூலம் பரவும் பரவலாகக் காணப்படும் நோயே மேகவெட்டை. இதை உண்டாக்குவது நெய்செரியா கொனேரியா (Neisseria gonorrhoea) என்ற வைரசாகும். இது இளம் வயதினர் மத்தியில் அதிகமாக இருக்கிறது. மேகவெட்டையை உண்டாக்கும் வைரஸ் பிறப்புறுப்புப் பாதை, வாய் அல்லது ஆசனவாயைப் பாதிக்கிறது. பொதுவாக மேகவெட்டை நோய் பிறப்புறுப்பு, வாய் அல்லது ஆசனவாய் மூலம் உடலுறவு கொள்ளும்போது ஏற்கெனவே நோயுள்ளவரிடம் இருந்து மற்றவருக்குப் பரவுகிறது. பேறுகாலத்தின் போது ஒரு கர்ப்பிணிப் பெண்ணிடம் இருந்து  குழந்தைக்கு இந்நோய் பரவுகிறது. சிறுநீர் கழிக்கும் போது அல்லது பிறப்புறுப்பு கசிவு வெளியேறும்போது ஓர் ஆணுக்கு எரிச்சல் ஏற்படும். பெண்களுக்குப் பெரும்பாலும் அறிகுறிகள் எதுவும் தென்படுவதில்லை அல்லது பிறப்புறுப்பில் இருந்து கசிவும் இடுப்பு வலியும் உண்டாகும். மேகவெட்டை நோய்க்கு சிகிச்சை அளிக்காவிட்டால் இருபாலருக்கும் பாதிப்புகள் ஏற்படும். விரை மேல் நாளம் அல்லது இடுப்பு அழற்சியும், உடல் முழுவதும் உள்ள மூட்டுகளும் இதய அடைப்பிதழ்களும் பாதிக்கப்படும்.

குறிப்புகள்  : www.nhs.uk
www.cdc.gov
www.who.int
www.nlm.nih.gov
www.niad.nih.gov

ஆண்கள்: மேகவெட்டை நோய் உள்ள ஆண்களுக்குக் கீழ்வரும் அறிகுறிகள் காணப்படும்:

  • ஆண்குறி நுனியில் இருந்து வெள்ளை, மஞ்சள், அல்லது பச்சை நிறக் கசிவு வெளிப்படும்
  • சிறுநீர் கழிக்கும்போது வலி அல்லது எரிச்சல்
  • நுனித்தோலில் அழற்சி
  • விரை அல்லது புரோஸ்ட்டேட் சுரப்பியில் வலி அல்லது மென்மை (அபூர்வமாக)

பெண்கள்: பெண்களுக்கு ஏற்படும் அறிகுறிகள்:

  • பெண்ணுறுப்பில் இருந்து பச்சை அல்லது மஞ்சள் நிறத்தில் கட்டியான அசாதாரணமான கசிவு
  • சிறுநீர் கழிக்கும்போது வலி
  • கீழ் வயிற்றுப் பகுதியில் வலி அல்லது மென்மை (அபூர்வமாக)
  • மாதவிடாய்க்கு இடையில் அல்லது மாதவிடாயின் போது அதிக இரத்தப் போக்கு (அபூர்வம்)

ஆண்களிலும் பெண்களிலும்: உடலின் பிற பாகங்களிலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் மேகவெட்டை உண்டாகலாம். அவையாவன:

  • மலக்குடல் பகுதியில் வலி, அசௌகரியம் அல்லது கசிவு
  • தொண்டை (பொதுவாக அறிகுறிகள் இருக்காது)
  • கண்களில், வலி, வீக்கம், அரிப்பு மற்றும் கசிவு

குறிப்பு  :www.nhs.uk

மேகவெட்டையை உண்டாக்குவது நெய்செரியா கொனேரியா (Neisseria gonorrhoea) என்ற வைரசாகும். பிறப்புறுப்பு, வாய் அல்லது ஆசனவாய் மூலம் உடலுறவு கொள்ளும்போது ஏற்கெனவே நோயுள்ளவரிடம் இருந்து மற்றவருக்குப் பரவுகிறது. நோயுள்ளவர்களின் பிறப்புறுப்பு கசிவில் இவ்வைரசுகள் காணப்படுகின்றன. பேறுகாலத்தின் போது ஒரு கர்ப்பிணிப் பெண்ணிடம் இருந்து  குழந்தைக்கு இந்நோய் பரவுகிறது. இதனால் பிறந்த குழந்தைக்கு கண்களில் தொற்று ஏற்படும். சிகிச்சை அளிக்காவிட்டல் பார்வையிழப்பும் உண்டாகலாம்.

குறிப்பு  : www.niaid.nih.gov

கிராம் சாயமுறை அல்லது பாக்டீரியா திசுவளர்ச்சி மூலம் மேகவெட்டை கண்டறியப்படுகிறது. புதிதாக பாலிமெரேஸ் தொடர்வினை அடிப்படையிலான ஆய்வுகளும் பரவலாகப் பயன்படுகின்றன.

மேலும் நோய்கண்டறியவும் உறுதிப்படுத்தவும் மருத்துவரை அணுகவும்.

குறிப்புகள் : www.cdc.gov
                    www.niaid.nih.gov

மேகவெட்டைக்கு உடனடியாக மருத்துவம் அளிக்க வேண்டும். கீழ்க்காணும் நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளால் சிகிச்சை அளிக்கலாம்:

  •     செஃப்ட்ரியாக்சோன் (Ceftriaxone)
  •     செபிக்சைம் (Cefixime)
  •     ஸ்பெக்டினோமைசின் (Spectinomycin)

சிகிச்சைக்கு உங்கள் மருத்துவரை நாடவும்.

குறிப்புகள்  : www.nhs.uk

பிறப்புறுப்பு உறைகளை அணிவதன் மூலமும் தொற்றில்லாதவர்கள் தமக்குள் ஒருதார உறவுகொண்டு வாழ்வதன் மூலமும் இந்நோயைத் தடுக்கலாம்.

  • PUBLISHED DATE : Apr 22, 2015
  • PUBLISHED BY : NHP CC DC
  • CREATED / VALIDATED BY : NHP Admin
  • LAST UPDATED ON : Jun 04, 2015

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.