மார்பகத் திசுக்களில், குறிப்பாகப் பால்நாளங்கள் (முலைக் காம்பிற்குப் பாலைக் கொண்டு செல்லும் குழாய்கள்), பால் சுரப்பிகள் ஆகியவற்றில், உருவாகும் புற்றுநோய். இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் வரும். ஆனால் ஆண் மார்பகப் புற்று மிக அரிது.
இப் புற்றில் பல வகை உண்டு: உதாரணமாக,
நாள மார்பகப் புற்று (Ductal Carcinomas): குழாய்களில் உண்டாகும் புற்று.
சுரப்பி மார்பகப் புற்று (Lobular carcinomas): சுரப்பிகளில் உண்டாகும் புற்று.
குறிப்புகள்:
www.cdc.gov
www.cancer.gov
www.who.int
www.health.puducherry.gov.in
www.breastcancer.org
பிற மார்புத் திசுக்களைப் போலல்லாமல் தொட்டறியத் தக்க கட்டிகளே பெரும்பாலும் அறியக் கூடிய அறிகுறிகள் ஆகும். கட்டிகள் தவிர பிறவற்றில் அடங்குவன:
-
மார்பு கடினப்படுதல்: ஒரு மார்பு மற்றதை விட பெரிது அல்லது சிறிது ஆதல்
-
முலைக்காம்பு நிலை அல்லது வடிவம் மாறுதல் அல்லது தலைகவிழ்தல்
-
தோலில் சுருக்கம் அல்லது குழி விழுதல்
-
முலைக்காம்பைச் சுற்றி அல்லது அதன் மேல் சொறி
-
மார்பின் ஒரு பகுதியில் அல்லது அக்குளில் தொடர் வலியோடு முலைக்காம்பில் நீர் வடிதல்
-
அக்குளின் கீழ் அல்லது கழுத்தெலும்பில் வீக்கம்
குறிப்புகள்:
www.merckmanuals.com
மார்பகப் புற்று நோய்க்கான சரியான காரணம் தெரியவில்லை என்றாலும் நோயுடன் சம்பந்தப்பட்ட ஆபத்துக் காரணிகள் வருமாறு:
-
வயது: வயது ஆகஆக புற்று நோய் வரும் அபாயம் அதிகரிக்கிறது. மாதவிடாயின் இறுதிக் கட்டத்தில் இருக்கும் ஐம்பது வயதைத் தாண்டிய பெண்களிடம் மார்பகப் புற்று நோய் பரவலாகக் காணப்படுகிறது.
-
பெண்தன்மை நீர்ம அளவுநிலை (Levels of estrogen): பெண்தன்மை நீர்ம அளவு உடலில் அதிகரித்தல். இதற்குக் காரணம் மாதவிடாய் விரைவாக ஆரம்பித்து காலந்தாழ்ந்து நிற்பதே. குழந்தைப் பேறு இல்லாமல் இருப்பதும், வயது முதிர்ந்த காலத்தில் குழந்தை பெறுவதும் மார்பகப் புற்று அபாயத்தை அதிகரிக்கிறது. காரணம் உடலில் பெண்தன்மை நீர்மம் அதிகரிக்கும் போக்கில் கர்ப்பமடைதல் குறுக்கிடாததேயாகும்.
-
குடும்ப நோய்வரலாறு: குடும்பத்தில் மார்பக அல்லது கர்ப்பப்பை புற்று ஏற்கெனவே இருந்திருந்தால் மார்பகப் புற்று வருவதற்கான அபாயம் அதிகம். BRCA1, BRCA2 ஆகிய மரபணுக்கள் மார்பக, கர்ப்பப்பை புற்றுக்கள் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கின்றன. இந்த மரபணுக்கள் பெற்றொரிடம் இருந்து பிள்ளைகளுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டு. மூன்றாவதாக TP53 என்ற மரபணுவும் புற்று நோய் அபாயத்துடன் சம்பந்தப்பட்டதேயாகும்.
-
மது: ஒருவர் குடிக்கும் மதுவின் அளவோடு இணைந்ததே மார்பகப் புற்று உண்டாகும் அபாயமும்.
-
புகைபிடித்தல்: புகை பிடித்தலும் மார்பகப் புற்று தோன்றும் அபாயத்துடன் இணந்ததே.
-
கதிர்வீச்சு: சிலவகை மருத்துவ ஆய்வுகளில் பயன்படுத்தப்படும் X- கதிர், CT – வருடிகளில் பயன்படுத்தப்படும் கதிவீச்சும் சிறிய அளவில் மார்பகப் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கின்றது.
குறிப்புகள்:
www.nhs.uk
உங்கள் மருத்துவரைத் தொடர்பு கொள்ளுங்கள்: மார்பகத்தில் கட்டி அல்லது வடிவ, நிற மாற்றங்கள் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உங்கள் மருத்துவரைத் தொடர்பு கொள்ளுங்கள்.
பிம்பம் உருவாக்குதல்: மார்பக ஊடுகதிர் படம் (Mammography) அல்லது கேளா ஒலி வருடி (ultrasound scan) ஆகியவை மார்பகப் புற்றைக் கண்டறியப் பயன்படுத்தப்படுகின்றன. கேளா ஒலி வருடி, அதி அதிர்வு ஒலி அலைகள் மூலம் உங்கள் மார்பகத்தின் உட்பகுதியின் பிம்பத்தை உருவாக்குகிறது. இந்த பிம்பம் உங்கள் மார்பகத்தில் உள்ள கட்டி அல்லது இயல்புக்கு மாறானவற்றைக் காட்டிவிடும். உங்கள் மார்பகத்தில் உள்ள கட்டி திடமானதா அல்லது நீர்மங்களைக் கொண்டுள்ளதா என்பதை அறிய உங்கள் மருத்துவர் மார்பகக் கேளா ஒலி ஆய்வையும் எடுக்க ஆலோசனை வழங்கலாம்.
நுண்ணோக்கி ஆய்வு: மார்பக ஊடுகதிர்படமும் பிற பிம்ப ஆய்வுகளும் மற்றும் உடல் ஆய்வுகளும் மார்பில் மாற்றத்தை (அல்லது இயல்புக்கு மாறானவற்றை) கண்டால் அது புற்று நோயாக இருக்கலாம். திசு ஆய்வால் மட்டுமே உண்மையில் புற்று நோய் உள்ளதா என்று கண்டறிய முடியும்
குறிப்புகள்:
www.nhs.uk
மார்பகப் புற்றுக்குத் தேவைப்படும் முக்கிய மருத்துவம் வருமாறு:
-
அறுவை மருத்துவம்: அறுவை மருத்துவத்தின் மூலம் கட்டியும் அதைச் சுற்றி இருக்கும் சிறிது தசைகளும் அகற்றப்படுகின்றன.
-
கதிர்வீச்சு மருத்துவம்: அறுவை மருத்துவத்திற்குப் பின் கட்டி இருந்த பகுதியிலும் சுற்றி இருக்கும் நிணநீர் முடிச்சுகளிலும் அறுவைக்குத் தப்பி எஞ்சி இருக்கும் நுண்ணிய புற்றணுக்களை அழிக்க கதிர்வீச்சு மருத்துவம் அளிக்கப்படுகிறது.
-
வேதியற்மருத்துவம்: பொதுவாக நோயின் இரண்டு மற்றும் நான்காம் நிலைகளில் கொடுக்கப்படுகிறது. இது குறிப்பாக எஸ்ட்ரோஜன் ரிசப்டார் நெகடிவ் (estrogen receptor-negative (ER-) நோய்களில் பயன்தருவதாக இருக்கும். இம்மருந்துகள் 3-6 மாதங்கள் இணைத்துக் கொடுக்கப்படும்.
குறிப்புகள்:
www.breastcancer.org
www.cancer.org
.png)
-
முறையான உடல் பயிற்சியும் சத்துணவும் எல்லா வயதையும் சேர்ந்த எல்லாப் பெண்களுக்கும் பரிந்துரைக்கப்படுகிறது.
-
தங்கள் குழந்தைகளுக்கு முலைப்பாலூட்டும் பெண்களுக்கு பாலூட்டாதவர்களை விட புற்றுநோய் அபாயம் குறைவாக உள்ளது. இதன் காரணம் மு/ற்றிலுமாக இன்னும் புரிந்துகொள்ளப் படவில்லை. ஆனால், முலைப்பாலூட்டும் போது தொடர்ந்து கருப்பையில் இருந்து சினை முட்டை வெளியேறாததால் பெண்தன்மை நீர்ம அளவு நிலையாக இருப்பதுவே இதற்குக் காரணமாக இருக்கலாம்.
-
மார்பக சுய பரிசோதனை (BSE) ஒவ்வொரு மாதமும் ஒரே சமயத்தில் முறையாகச் செய்யப்பட வேண்டும். ஏதாவது கட்டிகளோ மற்றங்களோ தென்படுகிறதா என பார்க்க வேண்டும்.