Asthma.png

ஆஸ்துமா

ஆஸ்துமா நீடித்துத் தொல்லை தரும் ஒரு நோயாகும். அடிக்கடி ஏற்படும் மூச்சடைப்பும் இழுப்பும் இந்நோயின் தன்மைகள் ஆகும். ஆஸ்துமா ஏற்படும்போது மூச்சுக்குழாய்களின் உட்புறப் படலம் வீக்கம் அடைகின்றது. இதனால் மூச்சுக்குழாய்கள் சுருங்குவதால் நுரையீரலில் இருந்து உட்புகும், வெளியேறும் காற்றின் அளவு குறைகிறது. ஆஸ்துமா ஏற்படும் காரணங்கள் தெளிவாக இன்னும் அறியப்படவில்லை. எனினும் ஒவ்வாப் பொருட்கள், புகையிலைப் புகை, உறுத்தல்தரும் வேதிப்பொருட்கள் போன்றவை ஆஸ்துமாவுக்குக் காரணமான ஆபத்தான பொருட்களாக இருக்கலாம். ஆஸ்துமாவை முற்றிலுமாகக் குணப்படுத்த முடியாது என்றாலும் தகுந்த நடவடிக்கைகள் மூலம் நோயைக் கட்டுப்படுத்தி மக்கள் ஆரோக்கியமாக வாழ்க்கை நடத்த உதவலாம்.

குறிப்புகள் www.cdc.gov

www.nhlbi.nih.gov
www.nlm.nih.gov
www.nhs.uk

ஆஸ்துமாவின் கூறுகள்:

 1. அடிக்கடி வரும் மூச்சுத் திணறல்
 2. இளைப்பு
 3. நெஞ்சடைப்பு
 4. இருமல்

இருமல் காரணமாக நுரையீரலில் இருந்து சளி வெளிவரும். இரவிலும், அதிகாலையிலும் அல்லது ஒவ்வாமை ஊக்கிகளைப் பொறுத்தும் அறிகுறிகள் மிக அதிகமாக இருக்கும்.

ஆஸ்துமாவுடன் இணைந்து காணப்படும் பிற உடல்நலக் கோளாறுகளில் பின்வருபவையும் அடங்கும்:

 • இரைப்பை உணவுக்குழாய் எதிர்வினை நோய் (Gastro Esophageal Reflex Disease-GERD)
 • புரையழற்சி (rhinosinusitis)
 • தூக்கத்தடை மூச்சுத்திணறல் (obstructive sleep apnea)

குறிப்புகள்:
www.nlm.nih.gov

ஆஸ்துமாவுக்கான சரியான காரணம் இதுவரை அறியப்படவில்லை. ஆனால் ஆஸ்துமாவுடன் தொடர்புடைய சில ஆபத்தான காரணிகள் உள்ளன. கீழ் வருவன அவற்றுள் அடங்கும்:

 • மரபுவழி ஒவ்வாமை (atopy) எனப்படும் பரம்பரையாக ஒவ்வாமையை உண்டாக்கும் போக்கு
 • ஆஸ்துமா உள்ள பெற்றோர்கள் (பரம்பரை)
 • தூசி, விலங்கு முடி, கரப்பான், பூஞ்சை, மரம், புல், பூக்களின் மகரந்தம் ஆகியவற்றில் உள்ள ஒவ்வாமை ஊக்கிகள்
 • புகையிலைப் புகை, காற்று மாசு, வேதிப்பொருட்கள், பணிபுரியும் இடத்துத் தூசி, தெளிப்பான்கள் (முடி தெளிப்பான்) போன்ற உறுத்தல் தரும் பொருட்கள்
 • ஆஸ்பரின் போன்ற மருந்துகள் அல்லது பிற ஊக்கிகள் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகளும் (non steroidal antii-inflamatory drugs), தேர்வு செய்யா பீட்டா-தடுப்பான்களும் (non-selective beta-blockers)
 • உணவிலும், பானங்களிலும் உள்ள சல்ஃபைட்டுகள்
 • சளி போன்ற மேற்புற மூச்சு மண்டல நுண்ணுயிரி தொற்று நோய்கள்
 • உடற்பயிற்சியை உள்ளடக்கிய உடல்சார்ந்த செயல்பாடுகள்
 • நோய்த்தடுப்பு மண்டலம் உருவாகிவரும் மழலை அல்லது குழந்தைப் பருவத்தில் ஒரு சில ஒவ்வாமை ஊக்கிகளின் பாதிப்போ அல்லது நுண்ணுயிரி தொற்றோ ஏற்படுதல்

குறிப்பு: www.cdc.gov

மருத்துவ வரலாறு: மருத்துவர் கேட்கக் கூடியவை:

 • ஒவ்வாமை, ஆஸ்துமா, அல்லது பிற மருத்துவ நிலைமை குறித்த செய்திகள் உள்ளிட்ட ஒருவரின் மருத்துவ வரலாறு.
 • நெஞ்செரிச்சல் அல்லது வாயில் புளிப்புச் சுவை இருக்கிறதா: இவை இரைப்பை உணவுக்குழாய் எதிர்வினை நோயின் (Gastro Esophageal Reflex Disease-GERD) அறிகுறியாக இருக்கலாம்.
 • சளி அல்லது சளிக்காய்ச்சல் இருந்ததா.
 • புகைபிடித்தல் அல்லது புகைபிடிப்பவரோடு பழக்கம் உண்டா.

உடல் பரிசோதனை: இறுமல் தொடர்பான பிரச்சினைகளுக்கான அறிகுறிகளைக் கண்டறிய மருத்துவர் ஸ்டெதஸ்கோப்பின் மூலம் உங்கள் நுரையீரலைப் பரிசோதிக்கிறார். மூச்சு விடும்போது இழுப்புச் சத்தமோ அல்லது வேறு அசாதாரணமான ஒலியோ கேட்கிறதா என்று கவனிக்கிறார். பிற சோதனைகள் வருமாறு:

 • மார்பு x-ரேயால் இருதயம் மற்றும் நுரையீரலின் படங்கள் கிடைக்கின்றன. இதன் மூலம் நிமோனியா மற்றும் நுரையீரல் புற்றுநோயைக் கண்டறிய முடியும்.
 • நுரையீரல் செயல்பாட்டுச் சோதனை: இதன் மூலம் எவ்வளவு காற்றை மூச்சிழுத்து வெளிவிடுகிறீர்கள், எவ்வளவு விரைவாக உங்களால் மூச்சுக்காற்றை வெளிவிட முடிகிறது, உங்கள் நுரையீரல் எவ்வளவு சிறப்பாக ஆக்சிஜனை இரத்தத்திற்கு கொடுக்கிறது என்றெல்லாம் அளவிட முடிகிறது. நுரையீரல் செயல்பாட்டுச் சோதனை ஆஸ்துமாவையும் பிற நிலமைகளையும் கண்டறிய உதவுகிறது.
 • மூக்கெலும்பின் உட்புழை x-ரே (sinus): இதன் மூலம் மூக்கெலும்பின் உட்புழையில் உள்ள தொற்றைக் கண்டறிய முடியும்.

குறிப்பு: www.nhlbi.nih.gov

மருந்து கொடுத்தல்: பொதுவாக உள்ளுறிஞ்சிகளின் மூலம் ஆஸ்துமாவுக்கு மருந்து அளிக்கப்படுகிறது. உடலின் வேறு பகுதிகளில் தங்காமல் மருந்து நேரடியாக நுரையீரலுக்குள் செல்லுவதால் உள்ளுறிஞ்சி மூலம் ஆஸ்துமாவுக்கு மருந்தெடுத்தல் ஒரு சிறந்த முறையாகும்.

நிவாரணமளிக்கும் உள்ளுறிஞ்சிகள் (Reliever inhaler): உள்ளுறிஞ்சப்படும் மருந்துகள் பொதுவாக ஒரு குறுகிய காலத்தில் செயல் புரியும் பீட்டா-2  இயக்கியைக் (short-acting beta-2 agonist) கொண்டுள்ளது. குறுக்கப்பட்ட காற்று வழிகளைச் சூழ்ந்துள்ள தசைகளை இது தளர்த்துகிறது. நிவாரணமளிக்கும் மருந்துகளில் சல்புயூட்டாமல் (sulbutamol), டெர்புயூட்டாலின் (terbutaline) ஆகியவை அடங்கும்.

நோய்த்தடுப்பு உள்ளுறிஞ்சிகள் (Preventer inhaler): காற்றுப்பாதைகளில் உள்ள அழற்சியையும், நரம்புத் தளர்ச்சியையும் குறைக்கும் வகையில் செயல்பட்டு ஆஸ்துமா ஏற்படுவதைத் தடுக்கிறது. பெக்ளோமெட்டாசோன் (beclometasone), புடேசோனைட் (budesonide), ஃபுளூட்டிகேசோன் (fluticasone), மொமெட்டாசோன் (mometasone) போன்றவை சிறந்த நோய்த்தடுப்பு உள்ளுறிஞ்சிகளாகும்.

குறிப்பு: www.nhs.uk

 • உறக்கம், வேலை, பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் குறுக்கிடும் நோய் அறிகுறிகள்
 • மூச்சுக் குழல்கள் நிரந்தரமாகச் சுருங்கிப் போதல் (காற்றுப்பாதை மறு அமைப்பு) நீங்கள் நல்ல முறையில் மூச்சு விடுவதைப் பாதிக்கும்
 • ஆஸ்துமா திடீரென அதிகரிக்கும் போது பணி அல்லது பள்ளிக்குச் செல்ல முடியாமை
 • கடுமையான ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும் மருந்துகளைத் தொடர்ந்து எடுக்கும்போது ஏற்படும் பக்கவிளைவுகள்

 • PUBLISHED DATE : May 18, 2015
 • PUBLISHED BY : NHP CC DC
 • CREATED / VALIDATED BY : NHP Admin
 • LAST UPDATED ON : Jun 03, 2015

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.