Pneumonia.png

நிமோனியா (நுரையீரல் அழற்சி)

நுரையீரல் திசு அழற்சியே (வீக்கம்)  நிமோனியா என்று அழைக்கப்படுகிறது. இந்நோயால் நுரையீரலின் காற்றுப்பைகள் பாதிக்கப்படுகின்றன. பொதுவாக இவ்வழற்சி, வைரசுகள் மற்றும் பாக்டீரியாக்களாலும், குறைந்த அளவில் பிற நுண்ணுயிரிகளினாலும், சில மருந்துகளாலும் உண்டாகின்றன. இந்தியாவில், 3.97 லட்சம் ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்கள் நிமோனியாவால் இறந்ததாக ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் அமைப்பின் 2010-ஆம் ஆண்டு ஆய்வு கூறுகிறது.

குறிப்புகள் : http://www.cdc.gov/pneumococcal/index.html 
http://www.unicef.org/media/files/UNICEF_P_D_complete_0604.pdf 
http://www.nhs.uk/conditions/Pneumonia/Pages/Introduction.aspx 
http://www.who.int/mediacentre/factsheets/fs331/en/ 
http://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3519012/

பொதுவான அறிகுறிகளில் அடங்குவன:

 • சுவாசப் பிரச்சினை: வேகமாகவும், மேலோட்டமாகவும், மூச்சுவிடுதல்
 • விரைவான இதயத் துடிப்பு
 • காய்ச்சல்
 • வியர்வையும் நடுக்கமும்
 • பசியின்மை
 • நெஞ்சில் வலி. அரிதாகக் காணப்படும் அறிகுறிகளில் அடங்குவன:
 • இருமும்போது இரத்தம்
 • தலைவலி
 • களைப்பு
 • குமட்டல்
 • வாந்தி
 • இளைப்பு

குறிப்பு : http://www.nhs.uk/Conditions/Pneumonia/Pages/Symptoms.aspx

நிமோனியா பெரும்பான்மையும் பாக்டீரியாக்கள், வைரசுகளாலும் சிறுபான்மை பூஞ்சைகள், பாரசைட்டுகளாலும் உண்டாகின்றன.

பாக்டீரியாவால் உண்டாகும் நிமோனியா:

பாக்டீரியாக்களே ஒட்டுவாரொட்டி நிமோனியாவுக்குப் பொதுவான காரணமாகும். இதில் 50% ஸ்ட்ரெப்டோகாக்கஸ் நிமோனியே பாக்டீரியாவால் (Streptococcus pneumoniae) ஏற்படுகிறது. பரவலாகக் காணப்படும் பிற பாக்டீரியாக்கள் ஹீமோஃபிலஸ் இன்ஃபுளுயன்சே (haemophilus influenzae), கிளாமிடொஃபிலா நிமோனியே (Chlamydophila pneumoniae), மைக்கோபிளாஸ்மா நிமோனியே (Mycoplasma pneumoniae) ஆகியவையாகும்.

வைரசால் உண்டாகும் நிமோனியா: ரினோ வைரசுகள்  (rhinoviruses), கொரோனா வைரசுகள் (coronaviruses), இன்ஃபுளுயன்சா வைரஸ் (influenza virus), பாரா இன்ஃபுளுயன்சா (para influenza) ஆகிய வைரசுகளால் நிமோனியா உண்டாகிறது.

பூஞ்சைகளால் உண்டாகும் நிமோனியா:

ஹிஸ்டோபிளாஸ்மா காப்சுலேட்டம்(Histoplasma capsulatum), பிளாஸ்டோமைசஸ் (blastomyces), கிரிப்டோகாக்கஸ் நியோஃபார்மன்ஸ் (Cryptococcus neoformans), நியுமோசிஸ்டிஸ் ஜிரோவெக் (Pneumocystis jirovec), காக்சிடியோய்ட்ஸ் இமிட்டிஸ் (Coccidioides immitis) ஆகிய பூஞ்சைகளால் பொதுவாக நிமோனியா உண்டாகிறது.

குறிப்பு : http://www.nhs.uk/Conditions/Pneumonia/Pages/Causes.aspx

பரவும் நிமோனியா நோயைத் தொடக்கத்திலேயே கண்டறிந்து மருத்துவம் அளித்தல் மிகவும் முக்கியமானதாகும்.

மூளைக்காய்ச்சல், குருதியோட்ட தொற்று நோய்கள் இருப்பதாக சந்தேகம் எழுந்தால் இரத்த அல்லது மூளைத்தண்டுவட நீர்ம மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்துக்குச் சோதனைக்காக அனுப்பப்படுகிறது. காரணத்தைப் பொறுத்து சிகிச்சை மாறுவதால் காரணத்தையும் நோய்க்கடுமையையும் கண்டறிவது முக்கியமானதாகும். நிமோனியாவுக்கு நுண்ணுயிர்க்கொல்லிகள் கொடுக்கும்போது நோய்க்கடுமை குறையும்.

பரவும் நிமோனியாவை உண்டாக்கும் பாக்டீரியாக்கள் இருந்தால் அவற்றைத் திசுவளர்ச்சி முறையில் வளர்த்தெடுக்கலாம்.

குறைந்த இரத்த அழுத்தம், இதயத்துடிப்பு அதிகரித்தல், குறைவான உயிர்வளிச் செறிவு ஆகியவை பரிசோதனையில் சிலசமயம் தென்படலாம். இயல்பை விட மூச்சு விகிதம் கூடும். பிற அறிகுறிகள் தோன்று முன்னர் இது ஒருநாளில் ஒன்றிரண்டு முறை ஏற்படலாம்.

குறிப்பு : http://www.cdc.gov/pneumococcal/about/diagnosis-treatment.html

இபுபுரூஃபன் போன்ற வலிநிவாரணிகள் கொடுக்கப்படலாம்.

பாக்டீரியாவால் ஏற்படும் நிமோனியாவுக்கு நுண்ணுயிர்க்கொல்லிகள் பயன்தரும்.

குறிப்பு: http://www.nhs.uk/Conditions/Pneumonia/Pages/Treatment.aspx

நிமோனியாவுடன் இணைந்துள்ள சிக்கல்கள் வருமாறு:

 1. நுரையீரல் சவ்வழற்சி: நுரையீரல்களுக்கும் விலாவெலும்புக் கூட்டிற்கும் நடுவில் இருக்கும் இரு மெல்லிய உறைகளான நுரையீரல் சவ்வில் நிமோனியா அழற்சியை உண்டாக்கும்.
 2. குருதிநச்சுறல்: நிமோனியாவின் இன்னொரு கடுமையான பாதிப்பு இரத்தம் நச்சுத்தன்மை அடைதல் ஆகும்.

குறிப்பு: http://www.nhs.uk/Conditions/Pneumonia/Pages/Complications.aspx

 • PUBLISHED DATE : Apr 21, 2015
 • PUBLISHED BY : NHP CC DC
 • CREATED / VALIDATED BY : NHP Admin
 • LAST UPDATED ON : Jun 04, 2015

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.