எகிர்வீக்கம்

உணவில் உயிர்ச்சத்து- சி  குறைவதால் ஏற்படும் கோளாறே எகிர்வீக்கம். கொலாஜென் என்ற பொருளை உருவாக்க, உயிர்ச்சத்து-சி எனப்படும் ஆஸ்கார்பிக் அமிலம் உடலுக்குத்  தேவையான ஒன்றாகும். தோல், இரத்தக் குழாய், எலும்புகள், குருத்தெலும்புகள் போன்ற பலவகையான திசுக்களில் காணப்படும் ஒருவகையான புரதமே கொலாஜென். உயிர்ச்சத்து –சி இல்லாமல் கொலாஜென் உருவாக முடியாததால் திசுக்கள் சிதைவடைகின்றன.

கடலில் கப்பல்களில் அதிக நாள் தங்கி இருக்கும் மாலுமிகள், கடற்கொள்ளைக் காரர்கள் போன்றோருக்கு இந்நோய் பரவலாகக் காணப்படும். அழுகும் பொருட்களான பழங்கள், காய்கறிகளை சேமித்து வைக்கக் கூடிய நாளுக்கும் மேலாகக் கடலில் தங்கும்போது உப்புக்கண்டமிட்ட கறியும் உலர்ந்த தானியங்களுமே இவர்களுக்கு உணவாகக் கிடைக்கும். பழங்களும் காய்கறிகளும் கிடைக்காத போது உயிர்ச்சத்து-சி யும் இவர்களுக்குக் கிடைக்காமல் போகிறது.

குறிப்புகள் : www.who.int 
www.nhs.uk 
www.nlm.nih.gov

உணவின் மூலம் ஒருவருக்குப் போதுமான உயிர்ச்சத்து-சி கிடைக்காமல் போய் மூன்று மாதம் கழித்து அறிகுறிகள் தோன்றுகின்றன. எகிர்வீக்கத்தின் ஆரம்பக் அறிகுறிகளில் அடங்குவன:

 • பல்லீறுகள் வீக்கம்: பல்லீறுகள் மென்மையாகி இரத்தம் கசியும். பற்கள் ஆடும் அல்லது விழலாம்.
 • எப்போதும் களைப்பாக உணர்தல்
 • அவயவங்களில் வலி, குறிப்பாகக் காலில்
 • சிறு செந்நீல புள்ளிகள் தோலில் தோன்றுதல். இவை முடிக்காலில் உண்டாகும். பெரும்பாலும் முழந்தாளில் இவை தோன்றுகிறது. பாதிக்கப்பட்ட இடத்தில் உள்ள முடி தக்கைத்திருகி போன்று நெளியும். பின் எளிதாக ஒடியும்.

பிற அறிகுறிகளில் அடங்குவன:

 • மூட்டுகளுக்கு உள் இரத்தம் கசிவதால் மூட்டுகளில் கடுமையான வலி
 • குறிப்பாக உடல் செயல்பாடுகளுக்குப் பின் மூச்சுத்திணறல்
 • சமீபத்தில் ஆறிய புண்ணில் சிவப்பும் வீக்கமும்
 • எளிதில் காயம்படும் தோல்

குறிப்பு : www.nhs.uk

உணவில் உயிர்ச்சத்து-சி குறைவதால் எகிர்வீக்கம் ஏற்படுகிறது. இதற்குப் பிற காரணங்களும் உள்ளன. அவை வருமாறு:

 • மது அல்லது மருந்துகளை அதிகம் சார்ந்திருத்தல்
 • கடும் மனவழுத்தம் அல்லது மனச்சிதைவு போன்ற சிக்கலான மனக்கோளாறுகள்.
 • வேதியற்சிகிச்சை போன்ற மருத்துவம்: இதனால் குமட்டல் ஏற்பட்டு நோயாளிக்கு பசி இல்லாமற் போகும்.
 • செரிமான மண்டலத்துக்குள் அழற்சியை உண்டாக்கும் குரோகன் நோய் அல்லது பெருங்குடல் அழற்சிப்புண் செரிமான சக்தியைப் பாதித்தல்.

குறிப்பு : www.nhs.uk

அறிகுறிகளைக் கொண்டே எகிர்வீக்கம் கண்டறியப்படுகிறது.

 • உயிர்ச்சத்து சி கொண்ட உணவை கொடுப்பதே இதன் சிகிச்சை (ஆரஞ்சு, பப்பாளி, ஸ்டிராபெரி, எலுமிச்சை)
 • உயிர்ச்சத்து சி மாத்திரை

குறிப்பு: www.nhs.uk

 • PUBLISHED DATE : May 19, 2015
 • PUBLISHED BY : NHP CC DC
 • CREATED / VALIDATED BY : NHP Admin
 • LAST UPDATED ON : Jun 29, 2015

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.