Chickenpox.png

சின்னம்மை

சின்னம்மை ஒரு தொற்று நோயாகும். இது அதிகமாகப் பரவக் கூடியது. வேரிசெல்லா-ஜோஸ்டர் என்ற வைரசினால் உண்டாகிறது. பொதுவாக சிறுவர்களுக்கே இந்நோய் ஏற்படும். எனினும் பெரியவர்களுக்கும் நோய்த்தடுப்பு மண்டலம் பலவீனமானவர்களுக்கும் வரக்கூடும். இதனால் பொக்களம், அரிப்பு, களைப்பு மற்றும் காய்ச்சல் உண்டாகும். இருமுவதனாலும் தும்முவதனாலும் காற்றின் மூலம் சின்னம்மை பரவும். கொப்புளங்களில் இருந்து வெளிப்படுபவற்றைத் தொடுவதாலும் மூச்சின் வழி உள்ளிழுப்பதாலும் உண்டாகக் கூடும்.

நோயுள்ள ஒருவர் மூலம் பரவும் இந்நோயின் நோயரும்பும் காலம் 10-21 நாட்கள் ஆகும். கொப்புளம் அரும்புவதற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு முன்பிருந்து அனைத்து கொப்புளங்களும் வெளிப்படும் வரை சின்னம்மை மிகவும் பரவும்.

குறிப்புகள்:
www.cdc.gov
www.unicef.org 
www.cdc.gov
www.nhs.uk

அறிகுறிகளில் அடங்குவன:

 • கொப்புளம் போன்ற சமச்சீரான கட்டிகள் முதலில் உடலின் நடுப்பகுதியில் தோன்றி பின் முகம், கை, கால்களுக்குப் பரவும்
 • அரிப்பு
 • குறைந்ததில் இருந்து மிதமான காய்ச்சல்
 • முதுகு வலி
 • தலைவலி
 • பசியின்மை
 • உடல்நலம் இல்லாதது போன்ற உணர்வு (அசதி)

குறிப்புகள்: www.cdc.gov

சின்னம்மை தொற்று நோயாகும். அதாவது தடுப்பு மருந்து எடுத்துக் கொள்ளாத ஒருவருக்கு நோய் வாய்ப்பட்ட மற்றொருவரிடம் இருந்து பரவும். இது வேரிசெல்லா-ஜோஸ்டர் என்ற வைரசால் பரவுகிறது. இருமல் அல்லது தும்மும்போது காற்று வழி பரவும். தலைதுவட்டும் துண்டு மூலமும், கைகுலுக்கல் போன்ற தொடர்புகளாலும் பரவும்.

குறிப்புகள்www.cdc.gov

நுண்ணோக்கிச் சோதனை: வேரிசெல்லா-ஜோஸ்டர் வைரசை ஆய்வகம் மூலம் உறுதிப்படுத்த, கொப்புளப் பகுதிகளே தெரிந்து கொள்ளப்படுகின்றன. பாலிமெரேஸ் தொடர்வினை அல்லது நேரடி எதிர்பொருள் ஒளிர்வு முறையில் வைரஸ் கண்டறியப்படுகிறது.

இரத்த சோதனை: கொப்புளங்கள் இல்லாதபோது இரத்த சோதனை மூலம் ஊனீர் மதிப்பீடு செய்யப்பட்டு கடும் நோயாளிகளின் வேரிசெல்லா IgG ஊனீர் அளவு கணக்கிடப்படுகிறது. இது முன்செய்யப்பட்ட நோய்காணலை உறுதிப்படுத்தும். ஆனால் நோய்த்தடுப்பாற்றல் குறைவு பட்டவர்களுக்கு நம்பகத்தன்மை கொண்டதல்ல.

குறிப்புகள்:  http://www.nhs.uk/Conditions/Chickenpox/Pages/Diagnosis.aspx

அரிப்புக்குக் கோலமைன் லோஷன், கொலாய்டல் ஓட்மீல் குளியல் போன்றவை சிறிதளவு நிவரணம் அளிக்கும். கொப்புளங்களைக் கீறுவதனால் தோல் தொற்று பரவாமல் இருக்க நகங்களை வெட்டி வைத்திருக்க வேண்டும்.

மருந்துகள்:

 • பாரசெட்டமால், இபூபுரூபன் போன்ற வலி நிவாரணிகள்
 • வைரஸ் எதிர்ப்பு மருந்துகளான அசைக்ளோவிர் போன்றவை (சிக்கலான நோயாளிகளுக்கு மருத்துவர் ஆலோசனைப்படி)
 • அதிக அளவில் நீராகாரம் குடிப்பது நீர்ச்சத்திழப்பைத் தவிர்க்கும்.

குறிப்புகள்

http://www.nhs.uk/Conditions/Chickenpox/Pages/Diagnosis.aspx

http://wwwnc.cdc.gov/travel/yellowbook/2014/chapter-3-infectious-diseases-related-to-travel/varicella-chickenpox

சின்னம்மைத் தடுப்பு மருந்தே சிறந்த வழி. அது பாதுகாப்பானதும் பயனளிப்பதும் ஆகும். தடுப்பூசி இட்ட பெரும்பாலானவர்களுக்கு சின்னம்மை வருவதில்லை.  அப்படியே தடுப்பு மருந்து எடுத்தவர்களுக்கு வந்தாலும் வீர்யம் குறைவாகவும், ஒரு சில கொப்புளங்களுடன் காய்ச்சலின்றி இருக்கும். 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கே தடுப்பூசி இட வேண்டும்.

முதல் தடவை: 12-15 மாதங்கள்

இரண்டாவது தடவை: 4-6 ஆண்டுகள்

குறிப்புகள்:
http://www.cdc.gov/chickenpox/vaccination.html
http://www.unicef.org/media/files/SOWVI_full_report_english_LR1.pdf

 • PUBLISHED DATE : May 19, 2015
 • PUBLISHED BY : NHP CC DC
 • CREATED / VALIDATED BY : NHP Admin
 • LAST UPDATED ON : Jun 04, 2015

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.