Eczema.png

சொறி

சொறி, ஒவ்வாமைத் தோல் அழற்சி என்று பொதுவாக அழைக்கப்படுகிறது. தொடர்ந்து காணப்படும் பல்திறப்பட்ட தோல் பிரச்சினைகளையே சொறி என்ற சொல் குறிக்கிறது.

உலர்ந்த தோலில் இருந்து சொறிவரை பல் வகையில் வெளிப்படும் இதன் அறிகுறிகள் கீழ்வருமாறு:

  • அரிப்பு
  • தோல் சிவப்பு
  • தோலில் செதில்கள்

ஒவ்வாமைத் தோல் அழற்சி பிறந்த குழந்தைகளுக்கும் ஏற்பட்டுப் பிள்ளைப்பருவத்திலும் இளமைப் பருவத்திலும் தொடரலாம். உடலின் எப்பகுதியிலும் இது வரும் என்றாலும் மண்டையோட்டிலும் முகத்திலும் நீர் வடியும் வெடிக்கும் சொறியாக உண்டாகும். சொறி உருவானதில் இருந்து பல மாற்றங்களை அடையும். குழந்தைப் பருவத்தில் காய்ந்தும் இளமைப் பருவத்தில் செதில் போன்றும் கடினமடைந்தும் காணப்படும். அரிப்பு தொடர்ந்து இருக்கும்.

குறிப்புகள்www.nhs.uk
www.niams.nih.gov
www.nlm.nih.gov
www.eczema.org
 

 

ஒவ்வாமையால் உண்டாகும் தோல் அழற்சி எரிச்சல் தரும் பொருட்கள், உணவு, சூழலியல் ஒவ்வாமையூக்கிகள் ஆகியவற்றால் தூண்டப்பட்டு அதிக அரிப்பை உண்டாக்கும். இதனால் பின்வருபவை உண்டாகும்:

  • தோல் சிவத்தல்
  • தோல் வீக்கம்
  • அரிப்பும் காய்ப்பும்
  • தோல் மூடி வெடித்தல்
  • செதில்
  • கொப்புளம்
  • நீர், இரத்தம் வடிதல்

இது சில சமயம் “அரிப்புச் சொறி” எனப்படும். ஏனெனில் சொறிக்கு முன் அரிப்பு உண்டாகிறது. சொறிவதால் சொறி ஏற்படுகிறது.

குறிப்பு: www.nhs.uk

சொறியின் சரியான காரணம் அறியப்படவில்லை. ஆயினும் பின்வரும் காரணங்களால் ஏற்படலாம்:

மரபியல்: கிடைத்துள்ள சான்றுகளின் படி ஒவ்வாமை அழற்சி மரபுவழியாகவும் ஏற்படலாம். எல்ல இன மக்களுக்கும் சொறி உண்டாகிறது.

ஹிஸ்டமின் எதிர்விளைவு: வெளிப் பொருட்களில் இருந்து உடலுக்குள் ஹிஸ்டமின் நுழையும் போது ஒவ்வாமை அழற்சி உள்ளவர்கள் பாதிப்படைகின்றனர். தக்காளி, புதினா, கத்திரிக்காய் போன்ற சில காய்கறிகளில் இயற்கையாகவே ஹிஸ்டமின் காணப்படுகிறது.

அதிகரிக்கவைக்கும் காரணிகள்: ஒவ்வாமைத் தோல் அழற்சியைக் கீழ்வருபவை கூட்டும்:

  • மகரந்தப் பொடி, தூசிப் பூச்சிகள், விலங்குகள்
  • குளிர்காலத்தில் குளிர்ந்த, உலர்ந்த காற்று
  • சளி, குளிர்காய்ச்சல்
  • ஒவ்வாமையூக்கிகள், வேதிப்பொருட்கள்
  • கம்பிளி போன்ற கரடுமுரடான பொருட்கள் உராய்தல்
  • உலர் தோல்
  • மனவழுத்தம்
  • சோப், தைலங்களில் உள்ள மண, நிறப் பொருட்கள்
  • புற ஊதா ஒளிக் கதிர்வீச்சு

குறிப்புகள்: www.niams.nih.gov
www.nhs.uk
 

கீழ்வருவனவற்றின் அடிப்படையில் சொறி கண்டறியப்படுகிறது:

  1. வரலாறு
  2. அறிகுறிகள்
  3. உடல் பரிசோதனை

ஆரோக்கியத்தைப் பற்றி நன்கு புரிந்து கொள்ள தேசிய சுகாதார இணையதளம் குறிப்பான தகவல்களைத் தருகிறது. நோய் வளர்ச்சி நபருக்கு நபர் மாறுபடுவதால் நோய் கண்டறிதலுக்கும் மருத்துவத்திற்கும் உங்கள் மருத்துவரை அணுகவும்.

குறிப்புகள்www.niams.nih.gov
www.nhs.uk
 

ஒவ்வாமை தோல் அழற்சியைக் குணப்படுத்த முடியாது. ஆனால் மருந்துகள் மூலம் பாதிப்பைக் குறைக்கலாம். சொறி மருந்துகளில் பொதுவாகப் பின் வருபவை அடங்கி இருக்கும்:

  • எமோலியண்டுகள் – உலர் தோலுக்கு வழக்கமாக பயன்படுத்துவது
  • டாப்பிக்கல் கோர்ட்டிகோஸ்டிராய்டுகள் – சொறி அதிகரிக்கும் போது வீக்கத்தையும் சிவத்தலையும் குறைக்க

ஆரோக்கியத்தைப் பற்றி நன்கு புரிந்து கொள்ள தேசிய சுகாதார இணையதளம் குறிப்பான தகவல்களைத் தருகிறது. நோய் வளர்ச்சி நபருக்கு நபர் மாறுபடுவதால் நோய் கண்டறிதலுக்கும் மருத்துவத்திற்கும் உங்கள் மருத்துவரை அணுகவும்.

References: www.nhs.uk
www.niams.nih.gov
 

சொறி நோய் உடையவர்கள் பெரியம்மை தடுப்பூசி எடுக்கக்கூடாது. ஏனெனில் எக்சிமா வேக்சினேட்டம் என்ற எதிர் விளைவு உண்டாகும். இது கடுமையானதும் சில சமயம் உயிருக்கு ஆபத்தானதும் ஆகும்.

குறிப்புகள்www.cdc.gov
 

  • PUBLISHED DATE : Apr 22, 2015
  • PUBLISHED BY : NHP CC DC
  • CREATED / VALIDATED BY : NHP Admin
  • LAST UPDATED ON : Jun 04, 2015

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.