Psoriasis.png

யானைச்சொறி

இது தடுப்பாற்றல் மண்டலக் கோளாறால் தோலில் ஏற்படும் பாதிப்பாகும். இதனால் சிவப்பான, தகடு போன்ற பொருக்குகள் உண்டாகும். வெள்ளி நிற செதில்கள் இவற்றைப் பொதிந்திருக்கும். இது பரவாது. உடலின் சிறு பகுதியையே இது பாதிக்கும். நோய்த் தடுப்பு மண்டலம், இயல்பான தோலணுவைக், கிருமி என தவறாக உணர்ந்து சைகைகளை அனுப்புவதால் புதிய தோலணுக்கள் அபரிதமாக உற்பத்தி செய்யப்படுகின்றன.

யானைச்சொறியின் வகைகளாவன:

சீழற்றது

தடிப்புச் சொறி: இதுவே பொதுவாகக் காணப்படும் யானைச்சொறி வகை. யானைப்படையால் பாதிக்கப்பட்டவர்களில் 80%—90% பேருக்கு இவ்வகையே காணப்படுகிறது. தோலின் அழற்சியுற்ற பகுதிகள் தடிப்பாகக் காணப்படும். இப்பகுதிகள் தடிப்புகள் எனப்படும்.
செஞ்சொறி: தோலில் பரவலான அழற்சியும் உண்டாகும். உடலின் பெரும்பகுதியில்  தோல் உரியும். இதைத் தொடர்ந்து கடுமையான ஊறலும், வீக்கமும், வலியும் ஏற்படும். இவ்வகையான சொறி ஆபத்தானது. அதிக அழற்சியாலும் தோல் உரிதலாலும் உடல் தனது வெப்பத்தைக் கட்டுப்படுத்தும் ஆற்றலை இழக்கும். தோல் தனது தடுப்பாற்றல் வேலையை ஆற்ற முடியாமல் போகும்.
சீழுடையது

தொற்றற்ற சீழ் நிரம்பிய கொப்புளங்களாக இது தோன்றும். கைகள், கால்கள் போன்ற குறிப்பிட்ட இடங்களிலும், அங்கிங்கெனாதபடி உடலின் எப்பகுதியிலும் படைகள் போலவும் தோன்றும். இதில் அடங்கும் வகைகள்:

 • எல்லா இடங்களிலும் வரும் சீழுடைய யானைச்சொறி
 • பஸ்ட்டுலோசிஸ் பல்மாரிஸ் எட் பிளாண்டாரிஸ் (Pustulosis palmaris et plantaris)
 • வளைய சீழுடை யானைச்சொறி
 • கைகால் தோலழற்சி
 • சிரங்கு

பிறவகை யானைச்சொறியில் அடங்குவன:

 • மருந்து தூண்டிய யானைச்சொறி
 • தலைகீழ் யானைசொறி
 • அணையாடை யானைச்சொறி
 • ஊறல் போன்ற தடிப்புத் தோலழற்சி

நீர்ச்சொட்டு யானைச்சொறி: அதிக எண்ணிக்கையில் சிறிய. செதிலுடைய, சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு கண்ணீர்த் துளிகள் போன்ற புண்கள் ஏற்படும்.

நகச்சொறி: கால் கை நகங்களின் தோற்றத்தில் பல்வேறு வகையான மாற்றங்கள் உண்டாகும். நக அடி நிறமிழத்தல், நகத்தில் குழிவிழுதல், நகத்தின் குறுக்காக கோடு விழுதல், நக அடித்தோல் தடித்தல், நகம் கழன்று பொடிதல் ஆகியவை இதில் அடங்கும்.

தடிப்புச்சொறி கீல்வாதம்: இதில் மூட்டுகளும், இணைப்புத் திசுக்களும் அழற்சி அடைகின்றன. தடுப்புச்சொறி கீல்வாதம் எந்த மூட்டையும் பாதிக்கும். ஆனால், பொதுவாக கால் கை விரல் மூட்டுகளே பரவலாகப் பாதிக்கப்படுகின்றன.

குறிப்புகள்: www.psoriasis.org 
www.cdc.gov 
www.nhs.uk 
http://dermnetnz.org/scaly/erythrodermic-psoriasis.html

தட்டைவீக்கச் சொறி :
தட்டை வீக்கம் எனப்படும் உலர்ந்த, வெள்ளிநிற செதிலுடைய சிவந்த தோல் புண்கள் இதன் அறிகுறி.

துளிவடிவச் சொறி:
நெஞ்சு, கரங்கள், கால்கள் மற்றும் உச்சந்தலையில் சிறிய (1 செ,மீ அல்லது 1/3 அங்குலத்தை விடக் குறைவு) துளி-வடிவப் புணகள் ஏற்படும்.

குறிப்பு : www.nhs.uk

யானைச்சொறி ஒரு தன்தடுப்பாற்றல் நோய். உடலின் நோய்த்தடுப்பு மண்டலம் மிகையாகச் செயல்பட்டு உடலில் உள்ள இயல்பான திசுக்களையும் தாக்குவதால் இது உண்டாகிறது.

குறிப்பு: www.cdc.gov 

 

பொதுவாக தோலின் தோற்றம் கொண்டே கண்டறியப்படுகிறது. இதற்கெனத் தனியாக இரத்த சோதனையோ நோய்கண்டறியும் முறைகளோ இல்லை.

எரிச்சலற்ற களிம்புகள், ஈரமாக்கிகள், கனிம எண்ணெய், பெட்ரோலியம் ஜெல்லி ஆகியவை பாதிக்கப்பட்ட தோலுக்கு இதம் அளிக்கும்.

படுக்கை ஓய்வு தேவை.

சிக்கல்களுக்கு மருத்துவம் அவசியம் (உதாரணமாக, நுண்ணுயிர்க்கொல்லிகள், சிறுநீர் இறக்கிகள், ஊட்டச்சத்து)

குறைந்த அளவில் மெத்தோடிரக்சேட் (methotrexate), சிக்லோஸ்போரின் (ciclosporin) அல்லது அசிட்ரெட்டின் (acitretin).

டி.என்.எஃப். ஆல்ஃபா தடுப்பிகள் (TNF-alpha inhibitors), அதாலிமுமாப் (adalimumab), எடனெர்செப்ட் (etanercept) மற்றும் இன்பிளிக்சிமாப் (infliximab) மற்றும் உஸ்டெகினுமாப் (ustekinumab) போன்ற உயிரியல் மருந்துகள் சில தனிப்பட்ட நோயாளிகளுக்கு பலன் அளித்துள்ளதாகத் தகவல்கள் உள்ளன.


குறிப்புகள்: www.cdc.gov
http://dermnetnz.org/scaly/erythrodermic-psoriasis.html

 • PUBLISHED DATE : Apr 21, 2015
 • PUBLISHED BY : NHP CC DC
 • CREATED / VALIDATED BY : NHP Admin
 • LAST UPDATED ON : Jun 04, 2015

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.