என்.எச்.பி. இந்திரதனுஷ் நோய்த்தடுப்பு

இளம் பெற்றோர் தங்கள் குழந்தைக்குத் தடுப்பு மருந்து அளித்தலை கண்காணித்துவர என்.எச்.பி. இந்திரதனுஷ் உதவிசெய்கிறது. பெற்றோர்கள் வீட்டுக்கும் பணிக்குமாக அலையும் போது முக்கிய மான தகவலை நினைவில் வைத்துக்கொள்ளும் கட்டாயத்தை இந்த செயலி அகற்றுகிறது. இந்திய மக்களுக்கு சுகாதாரப் பராமரிப்பு பற்றிய தகவலை அளிப்பதும் ஒட்டுமொத்தமான சுகாதாரத் தகவலுக்கான ஒரே அணுகல் புள்ளியாக சேவை செய்வதும் இந்திய தேசிய சுகாதார இணையதளத்தின் நோக்கமாகும்.

இந்தியாவின் அனைத்துக் குழந்தைகளுக்கும் 2020 ஆம் ஆண்டுக்குள் நோய்த்தடுப்பு மருந்தளிப்பதை விரிவாக்கும் நோக்கத்தோடு 25 டிசம்பர் 2014-ல் இந்திர தனுஷ் திட்டத்தை சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துரை அமைச்சகம் (MOHFW) தொடங்கியது. அதைத் தொடர்ந்து பெற்றோர் தமது குழந்தைகளுக்குத் தடுப்பு மருந்து அளிப்பதை கண்காணித்து வர உதவியாக அலைபேசி செயலி உருவாக்கப்பட்டது.

சிறப்பம்சங்கள்:
  • பெயர், பிறந்த தேதி போன்ற குழந்தைகளின் விவரங்களைப் பயனர் சேர்க்கலாம்.
  • தடுப்பு மருந்துக்கான நினைவூட்டலை ஒவ்வொரு குழந்தைக்காகவும் பயனர் உருவாக்க முடியும்
  • பரிந்துரைக்கப்பட்டவற்றைத் தவிர புதிய தடுப்பூசிகளையும் பயனர் சேர்க்க முடியும்
  • தற்போது ஆண்டிராய்ட் அலைபேசியில் இயங்குமாறு இந்தச் செயலி உருவாக்கப்பட்டுள்ளது
If you have questions or issues, please contact nhphds@gmail.com

செயலி திரைக்காட்சி