என்.எச்.பி. ஸ்வஸ்த் பாரத்

என்.எச்.பி. ஸ்வஸ்த் பாரத் அலைபேசி செயலி அதிகாரபூர்வமான சுகாதாரத் தகவலைப் பெற்றுக் கொள்ளுவது குடிமக்களின் தலையாய உரிமை ஆகும். சமூகத்திற்கு அளிக்கப்படும் அதிகாரபூர்வமான சுகாதாரத் தகவல் சுகாதாரத்தை மேம்படுத்துவற்கான ஒரு முக்கிய காரணியாகும். முழுமையற்ற அல்லது மோசமான சுகாதாரத் தகவல் மருத்துவமனையில் மக்களைக் கொண்டு சேர்க்கும் அல்லது நோய்ப்பளுவை அதிகரிக்கும். ஆதாரபூர்வமானதும் பொருத்தமானதுமான சுகாதாரத் தகவலைப் பொதுமக்கள் பெற்றுக்கொள்ள ஏதுவாக, சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம், தனது மின் ஆளுகை முன்முயற்சிகளில் ஒன்றாக “ஸ்வஸ்த் பாரத் அலைபேசி செயலியை” தொடங்குகிறது. ஆரோக்கிய வாழ்க்கை முறை, நோய்கள் (A-Z), அறிகுறிகள், சிகிச்சை முறைகள், முதலுதவி, பொது சுகாதார எச்சரிக்கை ஆகியவற்றைப் பற்றிய விவரமான தகவலை இந்தச் செயலி அளிக்கிறது. “ஸ்வஸ்த் பாரத் அலைபேசி செயலி” ஓர் ஆண்ட்ராய்டை அடிப்படையாகக் கொண்ட செயலி ஆகும். ஆண்ட்ராய்ட் ஓ.எஸ்.வெர்சன் அல்லது மேலான எந்த டிவைசிலும் இதை இன்ஸ்டால் செய்ய முடியும். வேறு பரவலான மேடைகளுக்குப் பொருந்துமாறும் இந்தச் செயலி உருவாக்கி அளிக்கப்படும்.

உங்களுக்கு ஏதாவது கேள்விகளோ பிரச்சினைகளோ இருந்தால் தொடர்பு கொள்ளவும் nhphds@gmail.com

செயலி திரைக்காட்சி